Saturday, September 9, 2017
ராமநாதபுரத்தில் ஏர் கண்டிஷனர் மற்றும் ஃபிரிட்ஜ் பழுது நீக்குதல் இலவச பயிற்சி!!
இராமநாதபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின்
கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் செப் 11ம் தேதி முதல், ஏர்
கண்டிஷனர் மற்றும் ஃபிரிட்ஜ் பழுது நீக்குதல் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது.
பயிற்சி பெற விரும்புவோர், 18 வயதிலிருந்து, 35 வயதுக்கு குறைவாகவும், குறைந்தபட்சம், 8ம் வகுப்பு படித்தவராகவும் இருக்க வேண்டும். ராமநாதபுர
மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், சுய
தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
30 நாள்கள் தொடர்ந்து
நடைபெறும் பயிற்சியானது காலை, 10 மணி முதல், மாலை, 5.30
மணி வரை நடைபெறும். பயிற்சி காலத்தில் மதிய
உணவு இலவசமாக வழங்குவதோடு, பயிற்சி முடித்தவுடன்
தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி
மைய இயக்குனரிடம் பெயர், வயது, விலாசம், கல்வித்தகுதி
ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.
ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளி மாற்றுச்சான்றிதழ் ஆகியவற்றின் நகல், 4 பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, 04567-221612
மற்றும் 9994151700 என்ற ஃபோன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
செய்தி: திரு. தாஹீர், கீழை
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
போராட்டத்தில் ஈடுபட்ட ராமநாதபுரம் கல்லூரி மாணவர்கள் கைது!!
நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும்
கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இந்த
கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக கல்லூரி மாணவர்கள்
மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை கல்லூரி மாணவ–மாணவிகள்
ஏராளமானோர் கல்லூரியில் இருந்து ஊர்வலமாக நடந்து சென்று தலைமை தபால் அலுவலகத்தில்
முற்றுகையிட சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று கல்லூரி மாணவ–மாணவிகளை
அச்சுந்தன்வயல் அருகே தடுத்து சமரசம் செய்தனர்.
அப்போது மாணவர்கள் ஊர்வலமாக சென்று முற்றுகையிட போவதாக
தெரிவித்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் மாணவ–மாணவிகள்
அந்த இடத்திலேயே அமர்ந்து திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை
தொடர்ந்து போலீசார் 137
மாணவிகள் உள்பட 258 பேரை கைது செய்தனர்.
செய்தி:
தினத்தந்தி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)