முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, June 29, 2017

பி.இ., நேரடி 2ம் ஆண்டு சேர்க்கைக்கு வரும் 30ம் தேதி கவுன்சலிங்!!

No comments :
 தமிழகத்தில் உள்ள 532 பொறியியல் கல்லூரிகளில் பி.இ., நேரடி 2ம் ஆண்டு சேர்க்கைக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

இதன்படி 94 ஆயிரத்து 518 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில்
சிவில் 15,967,
எலெக்ட்ரிக்கல் 52,942,
மெக்கானிக்கல் 23,703,
கெமிக்கல் 1,661,
டெக்ஸ்டைல் 233,
லெதர் 6,
பிரிண்டிங் 6
இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் பிஎஸ்சிக்கு 900 இடங்கள்.

இதற்கான விண்ணப்பங்கள் கடந்த மே 17ம் தேதி ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டு 19ம் தேதியுடன் முடிவடைந்தது. கவுன்சலிங் வரும் 30ம் தேதி துவங்கி ஜூலை 10ம் தேதி வரை காரைக்குடி அழகப்பசெட்டியார் அரசு பொறியியல் கல்லூரியில் நடக்கவுள்ளது. கடந்த ஆண்டு 12,427 பேர் சேர்ந்தனர்.

நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான கவுன்சலிங் வரும் 30ம் தேதி முதல் அடுத்த மாதம் 10ம் தேதிவரை நடக்கவுள்ளது. 

30ம் தேதி காலை 9.30 மணிக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகளுக்கும், லெதர், பிரிண்டிங் பிரிவுகளுக்கு நடைபெறும். 

1ம் தேதி காலை 8 மணி முதல் 9.30 வரை கெமிக்கல் பிரிவுக்கு நடைபெறும். 9.30 முதல் 11 மணி வரை டெக்ஸ்டைல் பிரிவுக்கு நடைபெறும். 1ம் தேதி மதியம் 1 மணி முதல் 3ம் தேதி மாலை 12.30 மணி வரை சிவில் குரூப்புக்கு நடைபெறும். 3ம் தேதி 3 மணி முதல் 7ம் தேதி மதியம் 12.30 மணி வரை மெக்கானிக்கல் குரூப்புக்கு நடைபெறும். 7ம் தேதி மதியம் 1.30 மணி முதல் 10ம் தேதி மாலை 3 மணி வரை எலக்ட்ரிக்கல் குரூப்புக்கு நடைபெறும். 10ம் தேதி மாலை 3 மணி முதல் 4 மணி வரை பி.எஸ்சி மாணவர்களுக்கு நடக்கவுள்ளது.

கவுன்சலிங்கிற்கு மாணவர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. கவுன்சலிங் நடக்கும் ஹாலுக்கு எதிரே கல்லூரிகளின் காலியிடங்களை தெரிந்துகெள்ளும் வகையில் பெரிய ஸ்கிரின் அமைக்கப்படும். மாணவர்கள் கட்ஆப் மார்க், என்று கவுன்சலிங், எத்தனை மணிக்கு அழைக்கப்படுவார்கள் உட்பட பல்வேறு விவரங்கள் கல்லூரியின் இணையதளம் www.accetlea.com -ல் வெளியிடப்பட்டுள்ளது.



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)