முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, June 15, 2017

ஜூன் 18ம் தேதி ராமநாதபுரம் மாவட்ட அணி வீரர்கள் தேர்வு!!

No comments :
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ஜூன் 30 முதல் ஜூலை 2 வரை 16 வயதிற்கு உட்பட்டோருக்கான மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி திண்டுக்கல்லில் நடக்கிறது.



இதில் பங்கேற்பதற்கான ராமநாதபுரம் மாவட்ட அணி வீரர்கள் தேர்வு மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் ஜூன் 18 காலை 10:00 மணிக்கு ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.

2001 செப்.1 மற்றும் அதற்கு பின் பிறந்தவர்கள் தேர்வில் பங்கேற்கலாம், என செயலாளர் கே.டி.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

பள்ளி அருகே குவிந்து கிடக்கும் குப்பையால் மாணவர்களுக்கு சுகாதாரக்கேடு!!

No comments :
ராமநாதபுரத்தில் பள்ளி அருகே குவிந்து கிடக்கும் குப்பையால் மாணவர்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சியில் தனியார் மெட்ரிக் பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியை ஒட்டி மாரியம்மன்கோயில் தெருவிற்கு செல்லும் பொது பாதை உள்ளது.

இந்த பாதை முழுவதும் குப்பை, இறைச்சி கழிவுகளை கொட்டி சுகாதாரக்கேடு ஏற்படுத்தி உள்ளனர். பள்ளி வகுப்பை ஒட்டிய பகுதியாக இது அமைந்துள்ளதால் மாணவர்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. காற்றில் துர்நாற்றம் வகுப்பறைக்குள் வீசுகிறது. 

மேலும், அவ்வப்போது குப்பைக்கு தீ வைப்பதால் புகையால் மாணவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

தொடர்ந்து இப்பகுதியில் குப்பை கொட்டப்படுவதால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

மாணவர்களின் நலன் கருதி பள்ளி நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும் இப்பகுதியில் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என பெற்றோர் தெரிவித்தனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பூட்டி கிடக்கும் கட்டண கழிப்பறை!!

No comments :
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பூட்டி கிடக்கும் கட்டண கழிப்பறையால் நோயாளிகளை பார்க்க வருபவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ராமேஸ்வரம், மண்டபம், உச்சிப்புளி உட்பட சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். இதுதவிர அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள், அவசர பிரசவ கேஸ்கள், அவர்களுக்கு உதவியாக வரும் பெண்கள், நோயாளிகளை பார்வையிட வரும் பார்வையாளர்கள் என பலரும் தினமும் வந்து செல்கின்றனர்.



நோயாளிகளை தவிர பார்வையாளர்களும் பயன்பெறும் வகையில் மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு சுகாதார திட்டத்தின்கீழ் பொதுகட்டண கழிப்பறை கட்டப்பட்டு இருந்தது. ஆரம்பத்தில் முறையாக பராமரிக்கப்பட்ட கழிப்பறை வளாகம் பின்னர் பராமரிப்பு பணியில் மந்தம் நிலவியது. தண்ணீர் வசதி முற்றிலும் இல்லை. இதையடுத்து தற்போது முற்றிலும் அடைக்கப்பட்ட நிலையில் உள்ளது.  இதனால் நோயாளிகளை பார்வையிட வரும் பார்வையாளர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

அவசர தேவைக்காக அவர்கள் நோயாளிகளின் கழிப்பறையை பயன்படுத்த முடியவில்லை.  இதனால் அவர்கள் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதற்கு மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பார்வையாளர்கள் பலர் வலியுறுத்தி உள்ளனர்.

மருத்துவமனை சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


செய்தி சாராம்சம்: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)