முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, June 4, 2017

ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டிற்குள் கடும் நெரிசல், காரணம் விதியை மீறும் டூவீலர்கள்!!

No comments :
ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டிற்குள் விதியை மீறி டூவீலர்களை நிறுத்திச் செல்வதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது. ஆனால், போலீசார் கண்டுகொள்ளாத நிலை உள்ளது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராமநாதபுரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு புதிய, பழைய பஸ் ஸ்டாண்டுகள் செயல்பட்டு வருகின்றன. தினமும் 300க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. நகர பஸ்களில் சுமார் 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் தினமும் வந்து செல்கின்றனர். தினந்தோறும் வெளியிடங்களுக்குச் செல்லும் மக்கள் ராமநாதபுரத்தின் மத்தியப் பகுதியில் இயங்கி வரும் பஸ் ஸ்டாண்டிற்கு அதிக அளவில் வருவதால் காலை, மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாகக் காணப்படும், அரசு, தனியார் பஸ்களிலும் பயணிகள் கூட்டம் எப்போதும் நிரம்பி வழிகிறது.
ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் வெளியேறும் பகுதி, பஸ்களை நிறுத்தும் டிராக் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க டூவீலர்களை நிறுத்தக்கூடாது என போலீசார் அறிவித்தனர். ஆனால், இதைக் கண்டுகொள்ளாமல் பஸ் ஸ்டாண்டிற்கு டூவீலரில் வருவோர் அறிவிப்பு பலகையின் அருகிலேயே தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு தங்கள் சொந்த வேலைகளுக்காக பஸ் ஸ்டாண்டின் உள்ளே செல்கின்றனர்.  

இதனால் தினந்தோறும் அப்பகுதியில் பஸ்களை நிறுத்த முடியாமல் பஸ் டிரைவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.  ஏற்கெனவே நெரிசலாக உள்ள பகுதியில் தொடர்ந்து வாகனங்களை நிறுத்துவதால் ஏற்படும் பிரச்னைகளைப் பொதுமக்கள் உணர்ந்து தங்கள் வாகனங்களை பஸ் ஸ்டாண்டின் வெளியிடங்களில் நிறுத்த  வேண்டும். பஸ் ஸ்டாண்டின் உள்ளே போக்குவரத்தைச் சரி செய்ய போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் அவர்களும் இதை கண்டுகொள்ளாமல் இருப்பதால் தங்கள் டூவீலர்களை இஷ்டம் போல் நிறுத்திவிட்டுச் செல்கின்றனர்.

போக்குவரத்து போலீசாரிடம் கேட்டபோது, “போதிய எண்ணிக்கையில் போலீசார் பணியில் இல்லை. தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். பஸ் ஸ்டாண்டிற்குள் முறையான அறிவிப்பு இருந்தும் பலர் போக்குவரத்துக்கு இடையூறாக தங்கள் டூவீலர்களை நிறுத்திச் செல்கின்றனர். இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.  பஸ் ஸ்டாண்டின் உள்ளே டூவீலர்களை நிறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்றார்.

நன்றி: தினகரன்



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ஆதார் அட்டை சேவைக்கு கூடுதல் கட்டணல் வசூ;லித்த்தால் தொலைபேசி எண் 18004252911ல் புகார் செய்யலாம்!!

No comments :
அரசின் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் பெயர் திருத்தம் உள்ளிட்டவற்றிற்கு அதிகபட்சம் ரூ.25 மட்டுமே பெறப்படுகிறது.
கூடுதல் கட்டணம் பெற்றால் கட்டணமில்லா எண்ணில் புகார் செய்யலாம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள எட்டு தாலுகா அலுவலகங்களிலும் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டையில் திருத்தம் ஏதும் இருந்தால் இந்த மையங்களை பயன்படுத்தி கொள்ளலாம். கைரேகை அல்லது கருவிழியை பயன்படுத்தி தங்களது பெயர், பிறந்ததேதி, பாலினம், முகவரி கைபேசிஎண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை திருத்தம் செய்து கொள்ளலாம்.

மேலும் புகைப்படம், கைவிரல்ரேகை, கருவிழி ஆகியவற்றையும் புதுப்பித்து கொள்ளலாம்.

ஆதார்பதிவு செய்ய, 5முதல் 15வயது முடிந்தவர்களுக்கு கைவிரல் ரேகை, மறுபதிவு செய்தல் போன்றவற்றிற்கு எவ்வித கட்டணமும் இல்லை. பெயர், பிறந்ததேதி, பாலினம், முகவரி, கைபேசி, மின்னஞ்சல் போன்றவற்றை திருத்தம் செய்ய ரூ.25, புகைப்படம், கைவிரல் ரேகை, கருவிழி புதுப்பிக்க ரூ.25 பெறப்படுகிறது.
இதேபோல் ஆதார் விபரங்களை தாளில் அச்சிட்டு பெற்றுக் கொள்ள ரூ.10 பெறப்படுகிறது.

பொதுமக்களுக்கு வழங்கப்படும் படிவங்களுக்கும் கட்டணம் கிடையாது. இந்த மையங்களில் வழங்கப்படும் ஒப்புகைச்சீட்டை மறக்காமல் கேட்டு பெற்று கொள்ள வேண்டும்.

சேவை தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 2911ஐ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)