முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, March 12, 2017

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுச்சாவடிகள் 2,099 ஆக அதிகரிப்பு!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுச்சாவடிகள் 2,099 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கான வரைவு பட்டியல் கலெக்டர் அலுவலகத்தில் அரசியல் கட்சியினர் முன்னிலையில் நேற்று வெளியிடப்பட்டது.

கடந்த அக்., மாதம் நடக்க இருந்த உள்ளாட்சி தேர்தல் சென்னை உயர்நீதிமன்றம் தடையால் நிறுத்தப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு சட்டசபை வாக்காளர் பட்டியல்படி வரைவு ஓட்டுச்சாவடி பட்டியலை இறுதி செய்ய மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. இதன்படி 2016 செப்., 2017 ஜன., 5ல் வெளியான சட்டசபை வாக்காளர் பட்டியல்படி உள்ளாட்சி, நகராட்சி வார்டு வாரியான ஓட்டுச்சாவடி பட்டியல் தயாரிப்பு பணி துவங்கியது.

இப்பட்டியலை கலெக்டர் நடராஜன் வெளியிட்டார். இதன்படி, ராமநாதபுரம் நகராட்சியில் 62,
பரமக்குடியில் 78,
ராமேஸ்வரத்தில் 35,
கீழக்கரையில் 33
வீதம் 208 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.

மண்டபம் பேரூராட்சியில் 18,
சாயல்குடி, அபிராமம், ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி, முதுகுளத்துõர், கமுதி பேரூராட்சிகளில் தலா 15
வீதம் 110 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.


ஊராட்சி ஒன்றியங்களில்
ராமநாதபுரத்தில் 124,
திருப்புல்லாணியில் 139,
மண்டபத்தில் 188,
ஆர்.எஸ்.மங்கலத்தில் 148,
திருவாடானையில் 183,
பரமக்குடியில் 145,
போகலுõரில் 94,
நயினார்கோவிலில் 118,
முதுகுளத்துõரில் 178,
கமுதியில் 206,
கடலாடி ஒன்றியத்தில் 258
வீதம் 1,781 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.

மேலும், தலா 102 ஆண், பெண் ஓட்டுச்சாவடிகள் உள்பட 2,099 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.

கலெக்டர் நடராஜன் கூறுகையில், கடந்த 2011 தேர்தலில் அனுமதிக்கப்பட்ட ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கையை விட 59 ஓட்டுச்சாவடிகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் கோரிக்கை மனு வந்தால் பரிசீலனைக்கு பிறகு உரிய திருத்தங்களுடன் இறுதி பட்டியல் மார்ச் 21ல் வெளியிடப்படும், என்றார்.


ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரை, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) உமா மகேஸ்வரி, பா.ஜ., சார்பில் நம்புராஜன், ராமச்சந்திரன், காங்., சார்பில் முருகேசன், தேசியவாத காங்., சார்பில் பகுர்தீன், மார்க்சிஸ்ட் கம்யூ., நிர்வாகி ஜான் சவுந்தரராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)