Wednesday, February 22, 2017
கோயிலை சுற்றியுள்ள மதுபான கடைகளால் பக்தர்களுக்கு சிரமம்!!
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலை சுற்றியுள்ள மதுபான
கடைகளால் பக்தர்கள்,
சுற்றுலா பயணிகள் பரிதவிக்கின்றனர்.
ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா
பயணிகள் வந்துசெல்கின்றனர். இந்நிலையில் கோயிலை சுற்றி நகரின் முக்கிய பகுதிகளான
பஸ் ஸ்டாண்ட்,
தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை, ரயில் நிலையம்
உள்ளிட்ட பகுதிகளில் 11
டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கிவருகிறது.
பார் வசதி உள்ளதால் இந்த கடைகளில் பின்வாசல் வழியான மதுபான
வியாபாரம் 24
மணி நேரமும் தங்குதடையின்றி நடக்கிறது.
பார் மற்றும் பொதுஇடங்களில் அமர்ந்து மது அருந்தும்
குடிமகன்கள் போதை தலைக்கேறிய நிலையில் அவ்வப்போது ரகளையில் ஈடுபடுவது, அருவருக்கத்தக்க
வார்த்தைகளால் பேசுவது அன்றாட நிகழ்வாகி வருகிறது.
போதை ஆசாமிகள் சிலர் பெண் பயணிகள், பக்தர்களை
குறிவைத்து தள்ளாடியவாறு அவர்கள் மீது இடிக்கின்ற சம்பவங்களும் நடக்கிறது. இவை
கோயிலுக்கு வரும் பக்தர்களையும், சுற்றுலா பயணிகளையும் பரிதவிக்க
வைக்கிறது. மேலும் புனித நகர் என்ற பெருமைக்கு பங்கம் விளைவிப்பதாகவும் உள்ளது.
விதிமுறைகளை மீறி கோயிலை சுற்றி திறக்கப்பட்டுள்ள மதுபான கடைகளை அகற்ற மாவட்ட
நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சுற்றுலா ஆர்வலர்கள்
வலியுறுத்தி வருகின்றனர்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுர மாவட்டத்தில் நிலவிய மூடுபனியால் வாகன ஓட்டிகள் அவதி!!
ராமநாதபுரத்தில் நேற்று காலை நிலவிய மூடுபனியால் வாகன
ஓட்டிகள் தடுமாறினர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், கடந்த
இரண்டு மாதங்களாக பனிப்பொழிவு அதிகமாக உள்ளது.
இரவு 8:00 மணி முதல் மறுநாள் காலை 7:00 மணி வரை நிலவும் பனிப்பொழிவால் குளிர் வாட்டி வதைக்கிறது. பனிப்பொழிவுக்கு
பயந்து காலை 8:00
மணிவரை வெளியே நடமாட அஞ்சி மக்கள் வீடுகளுக்குள்
முடங்கிவிடுகின்றனர். வேலைக்கும், கடைவீதிகளுக்கும் செல்வோர் ஸ்வெட்டர், பனிக்குல்லா
அணிந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், நேற்று காலை மூடுபனி
நிலவியது. இதன்காரணமாக எங்கு பார்த்தாலும் புகை மண்டலம் போல் காட்சியளித்தது.
எதிரே வரும் வாகனங்களை அடையாளம் காண முடியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறினனர். முகப்பு
விளக்கு மற்றும் மஞ்சள் விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்கள் சென்றதை காணமுடிந்தது.
அதிகாலை 3:00
மணி முதல் காலை 8:00 மணிவரை மூடுபனி
நீடித்தது.
இதே பனிப்பொழிவு ராமேஸ்வரம், ஆர்.எஸ்.மங்கலம், கீழக்கரை, சாயல்குடி, கமுதி, பரமக்குடி
உள்பட மாவட்டம் முழுவதும் நிலவியது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
சிவராத்திரி - மாவட்டம் முழுதும் சிறப்பு ஏற்பாடு!!
மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட
கோயில்களில் சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடக்கிறது.
முருகனுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், விநாயகருக்கு
ஆவணி சதுர்த்தி,
அம்மனுக்கு ஆடிப்பூரம், சிவனுக்கு மாசி களரி எனும்
மகா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான சிவராத்திரி விழா பிப்., 24ல் நடக்கிறது.
கிராமங்களில் குல தெய்வ வழிபாட்டுக்கு பின் சிவராத்திரி
விழா களைகட்டுவது வழக்கம்.
கலை நிகழ்ச்சிகளும் நடக்கும். ராமநாதபுரம் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கோயில்களில் சிவராத்திரி விழா நடக்கிறது.
இதற்காக விரதம்
துவக்கியுள்ள பக்தர்கள் கோயில்களில் உழவாரப்பணிகளை துவக்கியுள்ளனர்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)