முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, February 20, 2017

வறட்சி நிவாரணம் பெற விவசாயிகள் ஆவணங்கள் சமர்ப்பிக்க உத்தரவு!!

No comments :
தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதன் காரணமாக, அனைத்து மாவட்டங்களும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுஉள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதன் காரணமாக, அனைத்து மாவட்டங்களும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


இந்த நிவாரண தொகை சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட உள்ளதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்கு எண், வங்கி விவரம் மற்றும் ஆதார் எண் போன்ற விவரங்களை கிராம நிர்வாக அலுவலர் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்னும் சில விவசாயிகள் இதுவரை போதிய விவரங்களை அளிக்காமல் உள்ளனர்.


எனவே, இதுவரை விவரங்களை அளிக்காத விவசாயிகள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் ஏதேனும் ஒரு கிளையில் உடனடியாக வங்கி கணக்கு தொடங்கி அதன் விவரத்தினையும் ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் ஆகிய விவரங்களையும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம் 2 நாட்களுக்குள் அளிக்க வேண்டும். வங்கி கணக்கு விவரங்கள் அளிக்காத விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண தொகை உடனடியாக வழங்கப்படமாட்டாது என்று கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்ட நடன, ஓவிய போட்டிகள்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றத்தில் 5 முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கலை ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் பரதநாட்டியம், கிராமிய நடனம், குரலிசை, ஓவியம் ஆகிய கலைகளில் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.



இப்போட்டிகள் வருகிற 23ம் தேதி காலை 10 மணி அளவில் மாவட்ட அரசு இசை பள்ளியில் வளாகத்தில் நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொண்டு மாநில அளவில் போட்டிகளுக்கு சென்று வெற்றிபெற்றால்
முதல் பரிசாக ரூ.10 ஆயிரம்,
2ம் பரிசாக ரூ.7 ஆயிரத்து 500,
3ம் பரிசாக ரூ.5 ஆயிரம்


மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என திட்ட அலுவலர் லோக சுப்பிரமணியன் தெரிவித்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

நாளை பிப்-21ம் தேதி ராமநாதபுரம் மாவட்ட காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட காஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பிப்.,21 மாலை 4 மணிக்கு நடக்கிறது.

மாவட்ட வருவாய் அலுவலர் அலிஅக்பர் தலைமை வகிக்கிறார். காஸ் விநியோகம் தொடர்பான குறைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.



எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் காஸ் ஏஜென்ஜிகள் சார்பில் விளக்கம் அளிக்கப்படும்,


என கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)