முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, February 19, 2017

ஒளி பெற்றது எமனேஸ்வரம் தரைப்பாலம், முகவை முரசு செய்தியின் எதிரொலி!!

No comments :
நம் முகவை முரசு செய்தியின் எதிரொலி, ஒளி பெற்றது எமனேஸ்வரம் தரைப்பாலம்.

முயற்சி எடுத்த திரு. சேக் அப்துல்லாஹ் அவர்களுக்கும், நகர நிர்வாக்த்திற்கும் நெஞ்சான்ற நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.


எமனேஸ்வரம் வைகையாற்று சர்வீஸ் சாலைகளிலும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.




(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் முன்பாக தர்னா போராட்டத்தில் ஈடுபட்டவர் கைது!!

No comments :
ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் முன்பாக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வெள்ளிக்கிழமை திடீர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார்.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் வணிகவரித்துறை அமைச்சராக இருந்தவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த டி.ராமசாமி. இவரது மகன் டி.ஆர்.சீனிவாசன் . ராமநாதபுரம் நகர் ஜெயலலிதா பேரவையின் செயலாளரான இவர் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆவார்.


இவர் வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் டி.பிளாக் பேருந்து நிறுத்ததில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்துக்கு வந்தார். ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினரான அமைச்சர் மணிகண்டன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கே ஆதரவளிக்க வேண்டும் எனக்கூறி திடீரென தர்னாவில் ஈடுபட்டார்.

தகவலறிந்து வந்த கேணிக்கரை காவல்துறையினர் டி.ஆர்.சீனிவாசனையும் கட்சித் தொண்டர்கள் இருவரையும் கைது செய்தனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

பாம்பன் கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்!!

No comments :
பாம்பன் கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகளை சுங்கத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

ராமேசுவரம் பகுதியிலிருந்து இலங்கைக்கு போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதன் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பாம்பன் முந்தல் முனை கடற்கரையில் ரூ.1 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்ததை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர். 

இந்த மாத்திரைகளை கொண்டு வந்தவர்கள் யார், இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டதா என சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

இ–சேவை மையம் மூலம் வழங்கப்படும் இலவச வண்ண வாக்காளர் அடையாள அட்டை!!

No comments :
புதிய வாக்காளர்களுக்கு இசேவை மையம் மூலம் புகைப்பட அடையாள அட்டை இலவசமாக வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.
  
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்ய விண்ணப்பங்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1–ந்தேதி முதல் 30–ந்தேதி வரை பெறப்பட்டன. இதில் மொத்தம் 27,065 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 25,275 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. அவர்கள், கடந்த ஜனவரி மாதம் 5–ந்தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.



மேலும், இடப்பெயர்ச்சி, இறப்பு மற்றும் இரட்டை பதிவு ஆகியவற்றின் காரணமாக 1,554 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

புதிய வாக்காளர்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இசேவை மையங்கள் மூலம் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பத்தில் தங்களின் கைப்பேசி எண்ணை அளித்துள்ள புதிய வாக்காளர்களுக்கு ஒரு தனிப்பட்ட அடையாள எண், குறுஞ்செய்தி தேர்தல் ஆணையத்தால் அனுப்பப்படும்.


இந்த அடையாள எண்ணை தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள இசேவை மையத்தில் காண்பித்து வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

தங்களுடைய கைபேசி எண்ணை அளிக்காத புதிய வாக்காளர்கள், தேர்தல் துறையின் கட்டணமில்லா உதவி எண் 1950–ஜ தொடர்புகொண்டு கைப்பேசி எண்ணை பதிவுசெய்ய வேண்டும். அவர்களுக்கும் அடையாள எண் அனுப்பப்படும். அவர்களும் தங்களுடைய ஏதேனும் ஒரு புகைப்பட அடையாள சான்றை காண்பித்து இசேவை மையங்களில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.


இந்த தகவலை மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் பஸ் மீது கல்வீசி தாக்கிய தி.மு.க.வினர் கைது!!

No comments :
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டு பஸ் மீது கல்வீசி தாக்கிய தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

தமிழக சட்டசபையில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரத்தில் உயர் நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் சுப.தங்கவேலன், மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன் தலைமையில் அக்கட்சியினர் புதிய பஸ் நிலையம் பகுதியில் திடீரென்று பஸ் மறியலில் ஈடுபட்டனர்.



இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் அகமதுதம்பி, நகர் செயலாளர் கார்மேகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பாரகு, மாணவரணி அமைப்பாளர் துரைச்சாமி, முன்னாள் கவுன்சிலர் அய்யனார், இலக்கிய அணி கிருபானந்தம், பசூல்சாதிக், மணிமுத்தரசி கோவிந்தராஜ், மாணவரணி துணை அமைப்பாளர் கூரிதாஸ் உள்பட ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினரை கைது செய்தனர்.

ராமேசுவரத்தில் நகர் தி.மு.க. செயலாளர் நாசர்கான் தலைமையில் ஏராளமானோர் திட்டக்குடி சந்திப்பில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மீது கல்வீசி தாக்கியதில் முன்புற கண்ணாடி உடைந்தது. பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று சாலைமறியல் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

இதேபோல, கமுதி பஸ் நிலையம் பகுதியில் தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தூர்பாண்டியன் தலைமையில் பஸ் மறியலில் ஈடுபட்டனர். சாயல்குடியில் ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் தலைமையில் பஸ் மறியலில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்தனர். பரமக்குடியில் ஐந்து முனை பகுதியில் நகர் செயலாளர் சேதுகருணாநிதி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 37 பேர் கைது செய்யப்பட்டனர். பெருநாழி விளாத்திகுளம் விலக்கு ரோட்டில் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மனோகரன் தலைமையில் பஸ் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவாடானை ஓரியூர் விலக்கு ரோட்டில் ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 41 பேர் கைது செய்யப்பட்டனர். ஆர்.எஸ்.மங்கலம் பஸ் நிலையம் அருகே ஒன்றிய செயலாளர் மதிவாணன் தலைமையில் பஸ் மறியலில் ஈடுபட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர். முதுகுளத்தூர் பஸ் நிலையம் முன்பு மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைதுசெய்தனர். தேரிருவேலி கிராமத்தில் மறியலில் ஈடுபட்ட கிழக்கு ஒன்றிய செயலாளர் பூபதி மணி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலாடி தேவர் சிலை அருகே தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜசேகர் தலைமையில் முன்னாள் அமைச்சர் சந்தியமூர்த்தி, முன்னாள் ஊராட்சி தலைவர் அரண்மனை சாமி, வக்கீல் அசன் உள்ளிட்ட தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று 31 பேரை கைது செய்தனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)