முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, February 14, 2017

ராமநாதபுரத்தில் வரும் பிப்-17ம் தேதி விவசாயிகள் குறை தீர் கூட்டம்!!

No comments :


ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமையில் வரும் 17-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.




இதில் விவசாயிகளும், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த பொருள்கள் பற்றி மட்டுமே விவாதிக்க அனுமதிக்கப்படும் என ஆட்சியர் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் பிப்-22 ஆம் தேதி செயற்கை ஆபரணத் தயாரிப்பு இலவச பயிற்சி!!

No comments :

ராமநாதபுரத்தில் செயற்கை ஆபரணத் தயாரிப்பு இலவச பயிற்சி முகாம் வரும் 22 ஆம் தேதி தொடங்க இருப்பதாக பயிற்சி மைய இயக்குநர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 23 பேருக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.



பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பயிற்சி மைய இயக்குநர் ஆர்.சியாமளாநாதன் பேசியது:

இம்மையத்தின் சார்பில் செல்லிடப்பேசி பழுது பார்த்தல், இன்வர்ட்டர் மற்றும் யு.பி.எஸ். தயாரிக்கும் பயிற்சி உள்ளிட்டவை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

வரும் 22 ஆம் தேதி முதல் செயற்கை ஆபரணத் தயாரிப்பு பயிற்சி தொடங்கவுள்ளது. 10 நாள்கள் பயிற்சி நடைபெறும். இப்பயிற்சியில் சேர விரும்புவோர் 8 ஆம் வகுப்பு வரை படித்திருந்தாலே போதுமானது.

பயிற்சி உள்பட மதிய உணவு, பயிற்சிக் கையேடுகள் மற்றும் பயிற்சிக்கான சான்றிதழ்  அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படும். தினசரி காலை 10 மணிக்கு பயிற்சி தொடங்கி மதியம் 6 மணி வரை நடைபெறும். பெயரைப் பதிவு செய்யவும்,

மேலும் விபரங்களுக்கும் 04567-221612 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றார்.

நிறைவு நாள் விழாவுக்கு ஆதிதிராவிடர் வீட்டு வளர்ச்சிக் கழக அலுவலர் கண்ணன் முன்னிலை வகித்தார். பயிற்சி மைய மேலாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)