Wednesday, February 1, 2017
பட்ஜெட் 2017: முக்கிய அம்சங்கள்!!
2017-18ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதி அமைச்சர்
அருண் ஜேட்லி தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம்பிடித்துள்ள முக்கிய அம்சங்கள்
இவைதான்:
ரூ.2.50
லட்சம் முதல் ரூ.5 லட்சம்வரை ஆண்டு வருமானம்
உள்ளவர்கள் மீது தற்போது விதிக்கப்பட்டு வரும் 10 சதவீத
வருமான வரி 5
சதவீதமாக குறைக்கப்படும்.
செலவு, போட்டி, சூழல்நிலையை கருத்தில் கொண்டு ரயில் டிக்கெட் விலை அதிகரிக்கப்படும்.
செலவு, போட்டி, சூழல்நிலையை கருத்தில் கொண்டு ரயில் டிக்கெட் விலை அதிகரிக்கப்படும்.
தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு இதுவரை இல்லாத அளவாக
ரூ.48,000 கோடி ஒதுக்கீடு.
ஊரக,
கிராமப்புற அதை சார்ந்த தொழில்துறைக்கு ரூ.187223 கோடி ஒதுக்கீடு. கடந்த ஆண்டைவிட இது 24 சதவீதம் அதிகம்.
2019ம் ஆண்டுக்குள்,
ஏழைகளுக்கு ஒரு கோடி வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மூத்த
குடிமக்களுக்கு ஆதார் கார்டுடன் இணைந்த சுகாதார திட்டம் கொண்டுவரப்படும்.
குஜராத் மற்றும் ஜார்கண்டில் தலா ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை
அமைக்கப்படும்.
2019ல் அனைத்து ரயில் கழிவறைகளும் பயோ கழிவறைகளாக மாற்றம் செய்யப்படும்.
விவசாயத்துறைக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.10 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு. ரயில்வே பாதுகாப்பு நிதியகம் ரூ.100000 கோடியில் உருவாக்கப்படும். ஐந்த வருடங்களுக்கு இது செலவிடப்படும். ஐஆர்சிடிசி
வாயிலாக புக் செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கு சேவை வரி ரத்து
செய்யப்படுகிறது.
ரயில்வே, ஐஆர்சிடிசி பங்குகள் பங்கு சந்தையில்
அறிமுகப்படுத்தப்படும்.
ரயில்வேக்கு 22 சதவீத கூடுதல் நிதி
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சங்கல்ப் திட்டம் மூலம் 3.5 கோடி
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி திட்டம்.
அரசியல் கட்சிகள் அதிகபட்சமாக ஒரு நபரிடமிருந்து 2000 மட்டுமே ரொக்கமாக நன்கொடையாக பெற முடியும்.
1,50,000
கிராமங்களுக்கு பிராட்பேண்ட் வசதி அளிப்பதற்காக ரூ. 10,000 கோடி நிதி ஒதுக்கீடு.
2018
மே மாதத்திற்குள் அனைத்து கிராமங்களுக்கும் 100 சதவீத மின்வசதி.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)