முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, January 31, 2017

ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!!

No comments :

ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக  கியூப்பா அமைப்பு தொடர்ந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்தது.

அப்போது ஜல்லிக்கட்டு சட்டம் 2 நாட்களில் அரசிதழில் வெளியிடப்படும் என நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் சட்டம் 2014ம் ஆண்டின் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக உள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.



எனினும் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள போது அதைப் பற்றி பேசவே கூடாது என்பது தான் சட்டம். ஆனால் அதனை மீறி தமிழகத்தில் எவ்வாறு போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டங்கள் நடத்த தமிழக அரசு அனுமதித்தது ஏன். மேலும் ஜல்லிக்கட்டுக்கு சட்டம் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்த சட்ட ரீதியான பதில்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

கீழக்கரை கல்லூரியில் நடைபெற்ற விலையில்லா மடிக்கணினி வழ்ங்கும் விழா!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ரூ.27¾ லட்சம் மதிப்பில் 163 மாணவமாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். விழாவுக்கு மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமை வகித்தார்.

விழாவில் அமைச்சர் மணிகண்டன் பேசியதாவது:



மறைந்த முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதா மாணவ, மாணவிகளின் நலனை மேம்படுத்தும் விதமாக 14 வகையான மாணவர் நல திட்டங்களை செயல்படுத்தினார். இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநிலத்திலும் முழுமையாக செயல்படுத்த இயலாத திட்டமான இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.8,900 கோடி மதிப்பில் 33 லட்சம் மாணவ மாணவிகள் தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகளைப் பெற்று பயனடையும் வகையில் தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.



இதுதவிர மாணவமாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் மொத்தம் 5,00,000 மாணவமாணவிகளுக்கு ரூ.890 கோடி மதிப்பில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்க திட்டமிடப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு மாணவ மாணவிகளின் நலனில் அக்கறை கொண்டு செயல்படுத்தி வரும் பல்வேறு மாணவர் நல திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முகமது சதக் அறக்கட்டளை தலைவர் யூசுப் சாகிப், இயக்குனர் ஹாமீது இப்ராகீம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, முன்னாள் எம்.எல்.ஏ. அசன்அலி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயஜோதி, முன்னாள் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் தர்மர், சுந்தரபாண்டியன், கீழக்கரை நகர் செயலாளர் ராஜேந்திரன், கீழக்கரை நகர் மாணவரணி செயலாளர் சுரேஷ் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் உள்பட அரசு அலுவலர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)