Saturday, January 28, 2017
இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் சுகாதார சீர்கேடு!!
இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில்
செயல்பட்டு வந்த இலவச சிறுநீர் கழிப்பிடம் பூட்டப்பட்டதால் அந்தப் பகுதி முழுக்க சிறுநீர் கழித்து சுகாதார் சீர்கேடு செய்யப்பட்டு பேருந்து நிலையம் முழுக்க துர்நாற்றம் வீசுகிறது.
செயல்பட்டு வந்த இலவச சிறுநீர் கழிப்பிடம் பூட்டப்பட்டதால் அந்தப் பகுதி முழுக்க சிறுநீர் கழித்து சுகாதார் சீர்கேடு செய்யப்பட்டு பேருந்து நிலையம் முழுக்க துர்நாற்றம் வீசுகிறது.
மாவட்ட தலைநகர பேருந்து நிலையம் ஊராட்சி பேருந்து நிலையங்களை விட மிக மிக மோசமாக இருக்கின்றது.
கவனிக்குமா நகராட்சி நிர்வாகம்..?
ஆதங்கத்துடன்
சேக்
அப்துல்லாஹ், இராமநாதபுரம்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
கீழக்கரை கடலோரங்களில் சுகாதார கழிப்பறைகள் அமைக்கும் பணிகள் ஜரூர்!!
கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திறந்த வெளி
கழிப்பிடங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சுகாதார கழிப்பறைகள் அமைக்கும்
பணிகளை நகராட்சி நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் எஸ்.சந்திரசேகரன் கூறியதாவது:
எஸ்.பி.எம்., திட்டத்தின் கீழ் பெத்தரி
தெரு, தாலுகா அலுவலக வளாகம்,
மீனவர் குப்பம், கடற்கரை ஜெட்டி பாலம், கலங்கரை
விளக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார கழிப்பிடங்கள் அமைக்கும் பணி நடக்கிறது.
தனிநபர் கழிப்பறைகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் இதுவரை
புதிதாக 287
வீடுகளில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு மானியமாக 8 ஆயிரம்
ரூபாய் வீதம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏழ்மை நிலையில் உள்ள பயனாளிகள் 50 பேரை தேர்வுசெய்து அவர்களது வீடுகளில் தனியார் பங்களிப்புடன் கழிப்பறைகள்
அமைத்து கொடுக்கப்படும்.
துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 21 வார்டுகளிலும் திறந்தவெளி கழிப்பிடங்களே இல்லாத நிலை உருவாக்கப்படும், என்றார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரம் அருகே கஞ்சா வியாபாரி கொடூர கொலை!!
தலையில் கல்லைப்போட்டு கஞ்சா வியாபாரி கொடூரமாக
கொல்லப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்
(60), கஞ்சா வியாபாரியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நேற்று முன்தினம் இரவு ரயில்வே ஸ்டேஷன் பகுதியில்
ராமகிருஷ்ணன் சென்றார். அப்போது, மர்ம நபர்கள் அவரை வழிமறித்து
தாக்கினர். கீழே தள்ளி,
அவரது தலையில் கல்லைப் போட்டுக் கொன்றுவிட்டு தப்பினர்.
மண்டபம் போலீசார், ராமகிருஷ்ணன் உடலை மீட்டு
பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தொழில் போட்டி காரணமாக கொலை நடந்திருக்கலாமா என்ற கோணத்தில்
போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுர மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை!!
ராமநாதபுர மாவட்டத்தில் கடந்த
2 நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில்
நேற்று பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இரவு 7 மணி வரை இடை விடாமல்
தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டே இருந்தது.
ராமேசுவரம் கோவிலின் தெற்கு
ரதவீதி சாலை, நகராட்சி அலுவலகம் அருகில்
தனுஷ்கோடி செல்லும் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. நகரின் தாழ்வான
இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது.
இதனால் அனைத்து வாகனங்களும்
மழை நீரில் தத்தளித்தடி படியே சென்றன. ஒரே நாளில் தொடர்ச்சியாக ராமேசுவரம்
பகுதியில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தை அமாவாசையையொட்டி
ராமேசுவரம் வந்த பக்தர்கள் மழையில் நனைந்தபடியே அக்னி தீர்த்த கடலில்
நீராடினார்கள். இதேபோல் பாம்பன், தங்கச்சிமடம், கீழக்கரை
பகுதிகளிலும் நேற்று பலத்த மழை பெய்தது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் எழுத்தர் வேலை!!
நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் எழுத்தர் (Clerk) பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலமாக விரைவில் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணிக்கு பி.ஏ., பி.காம்., பி.எஸ்.சி., பி.இ., பி.டெக். பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
கலை அறிவியல் பட்டம் என்றால் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் அவசியம்.
இன்ஜினீயரிங் படிப்பு முடித்தவர்கள் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
பட்டப் படிப்புகள் ரெகுலர் முறையில் பெற்றதாக இருக்கவேண்டியது அவசியம். அஞ்சல்வழி கல்வித் திட்டம் மற்றும் திறந்தநிலை கல்வித் திட்டத்தில் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரர்கள் அடிப்படைக் கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். தமிழில் நன்கு பேச, எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு 24. முதுகலைப் பட்டம் பெற்றிருந்தால் 26. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு 2 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி.,பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
எழுத்துத் தேர்வு ஆன்லைன் வழியில் நடைபெறும். நேர்காணல்
அடிப்படையில் தகுதியான நபர்கள், எழுத்தர் பணிக்குத்
தேர்வுசெய்யப்படுவர்.
எழுத்தர்களுக்குச் சம்பளம் ரூ..20,200 என்ற அளவில் கிடைக்கும். உரிய கல்வித்தகுதியும் வயதுத் தகுதியும் உடைய பட்டதாரிகள் ஆன்லைனில் ( www.tmb.in ) விண்ணப்பிக்க வேண்டும். (வங்கியின் இணையதளப் பக்கத்தில் வலதுபுறம் அடியில் ‘Recruitment/Career’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்) ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அந்த விண்ணப்பத்தைப் பிரிண்ட் அவுட் எடுத்து அத்துடன் தேர்வுக்கட்டணத்துக்கான டிமாண்ட் டிராப்ட் மற்றும் கல்வித்தகுதிக்கான சான்றிதழ்களின் நகல்களை இணைத்துத் தூத்துக்குடியில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு பிப்ரவரி 2-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
ஆன்லைன் தேர்வின் விவரம் குறித்து விண்ணப்பதாரர்களுக்குத் தபாலிலும் மின்னஞ்சல் மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்படும் என்று தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி அறிவித்துள்ளது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)