Wednesday, January 4, 2017
ராமநாதபுரத்தில் முதல் முறையாக தேசிய அளவிலன ஹாக்கி போட்டிகள்!!
ராமநாதபுரத்தில் முதல் முறையாக தேசிய அளவில் 7 ஆவது
சப்-ஜூனியர் மகளிர் ஹாக்கிப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. இதில் பங்கேற்க
வெளிமாநிலங்களிலிருந்து 800
விளையாட்டு வீராங்கனைகள் வந்துள்ளனர்.
ராமநாதபுரம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேலுமாணிக்கம் சர்வதேச ஹாக்கி விளையாட்டு
மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டிகளை,
ஆட்சியர் எஸ். நடராஜன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.
செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியின் தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, மாவட்ட
ஹாக்கி சங்க துணைத் தலைவர் வேலு. மனோகரன், ஒலிம்பிக் விளையாட்டு வீரர்
புபீந்தர்சிங்,
அர்ஜூனா விருது பெற்ற வி.ஜெ. பிலிப்ஸ் ஆகியோர் முன்னிலை
வகித்தனர். முன்னதாக,
தமிழக ஹாக்கி சங்கத்தின மாநிலத் தலைவர் செல்லத்துரை
அப்துல்லா வரவேற்றுப் பேசினார்.
இப்போட்டிகளில் பங்கேற்க, தமிழ்நாடு, ராஜஸ்தான், குஜராத், ஜம்மு-காஷ்மீர், உத்தரகண்ட், மணிப்பூர், அஸ்ஸாம், ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த 800 விளையாட்டு வீராங்கனைகள் ராமநாதபுரத்துக்கு வந்துள்ளனர்.
தொடக்க விழாவை முன்னிட்டு
நடைபெற்ற அணிவகுப்பில்,
வீராங்கனைகள் ஹாக்கி கொடியை ஏந்தியவாறு வந்தனர். இதில், பல்வேறு
மாநில அணிகளும் வரிசையாக அணிவகுத்து வந்தன. புதன்கிழமை அதிகாலை முதல் போட்டிகள்
தொடங்கி,
22 ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகின்றன. போட்டிகளில்
பங்கேற்கும் விளையாட்டு வீராங்கனைகள் இரு அணிகளாகவும், ஒரு
அணிக்கு தலா 400
பேர் வீதம் மொத்தம் 800 பேர் பங்கேற்கவுள்ளனர்.
இதில், மாவட்ட
ஆட்சியர் எஸ். நடராஜனுக்கு,
தமிழக ஹாக்கி சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்லத்துரை
அப்துல்லா வலம்புரிச் சங்கு ஒன்றை பரிசாக அளித்தார். விழா நிறைவாக, தமிழகத்தின்
கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் பரதநாட்டியம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம்
உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
முடிவில், தமிழக
ஹாக்கி சங்கப் பொருளாளர் செந்தில் ராஜ்குமார் நன்றி கூறினார்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
மதுரை–ராமேசுவரம் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க ஆய்வு!!
மதுரை–ராமேசுவரம் இடையே இயக்கப்பட்டு வரும்
ரெயில்களின் வேகத்தை அதிகரிப்பது தொடர்பாக மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு
மேற்கொண்டார்.
ராமேசுவரத்தில் இருந்து மதுரை வழியாக வாரணாசி, ஓகா, கோவை, திருப்பதி, கன்னியாகுமரி
போன்ற பகுதிகளுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்களும், மதுரையில் இருந்து பயணிகள்
ரெயிலும் இயக்கப்படுகிறது. மதுரை–ராமேசுவரம் இடையே இயக்கப்பட்டு வரும்
ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக ஆய்வு மேற்கொள்வதற்காக மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர்
சுனில்குமார் கர்க் நேற்று மதுரையில் இருந்து ஆய்வு ரெயில் மூலம் ராமேசுவரம்
வந்தார்.
அந்த ரெயில் 120 கிலோ மீட்டர் வேகத்தில்
இயக்கப்பட்டது. அப்போது ரெயில் தண்டவாளத்தின் உறுதித்தன்மை, அதிர்வு
ஆகியவற்றை அதற்கான கருவி மூலம் சோதனை கோட்ட மேலாளர் ஆய்வு செய்தார். பின்பு
பாம்பன் ரெயில் பாலத்தை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து ராமேசுவரம் வந்த அவர்
ரெயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள டிக்கெட் பரிசோதகர்கள் ஓய்வு அறையை
திறந்து வைத்தார்.
இதன்பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
மதுரை–ராமேசுவரம் இடையே மின்சார ரெயில்
திட்டம் எதுவும் இல்லை. ராமேசுவரத்துக்கு, சென்னை மற்றும் முக்கிய
நகரங்களில் இருந்து புதிய ரெயில் விடுவதற்கான வாய்ப்பு தற்போது இல்லை.
திருவிழாக்காலங்களில் மட்டும் மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு சிறப்பு ரெயில்
இயக்கப்படும்.
பாம்பன் பாலத்தில் ரூ.40 கோடி செலவில் அமைக்கப்பட
உள்ள புதிய தூக்குப்பால பணிகள் விரைவில் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன் துணை கோட்ட மேலாளர் முரளிகிருஷ்ணா
உடனிருந்தார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
அரசு மருத்துவமனையில் பணியாளர்களின் அலட்சியத்தால் நோயாளிகள் அவதி!!
அரசு மருத்துவமனையில் பணியாளர்கள் பணி செய்யாமல் அடிக்கடி
வெளியே சென்று விடுவதால்,
பெயர்களை பதிவு செய்ய முடியாமல் நோயாளிகள் சிரமம் அடைந்து
வருகின்றனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு, தீவிர இருதய சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு, அறுவைச் சிகிச்சை பிரிவு, குழந்தை மருத்துவம், கண் மருத்துவம், பல் மருத்துவம், மனநல மருத்துவம், விஷ முறிவு சிகிச்சை, காசநோய் சிகிச்சை, சித்த மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், மண்டல பரிசோதனைக் கூடம் உட்பட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
தினமும் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். மருத்துவமனை வளாகத்தில் நிர்வாக அலுவலகம், இணை இயக்குநர் அலுவலகம், அரசு நர்சிங் கல்லூரி, பணியாளர் கூட்டுறவு சங்கம், பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் அலுவலகம், மலேரியா பரிசோதனை கூடம் ஆகியவையும் செயல்பட்டு வருகிறது.

அரசு மருத்துவமனையில் அட்டெண்டர் பணிக்கு பணியாளர்கள் வந்தாலும் இருக்கையில் அமர்ந்து பணி செய்யாமல் அடிக்கடி வெளியே சென்று விடுகின்றனர். இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள் நோயாளிகளுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளுக்கு நோயாளிகளின் பெயர்களை பதிவு செய்ய முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதுதவிர இங்கு நோயாளிகளுக்கு தகுந்த கழிப்பறை வசதிகள் இல்லை. இருக்கும் கழிப்பறைகளும் இடிந்தும், சுகாதாரமின்றியும் உள்ளன. நர்சுகள், ஊழியர்கள், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு என்று தனி கழிப்பறைகள் கிடையாது. அவர்களும் நோயாளிகளின் கழிப்பறைக்கு செல்ல வேண்டியுள்ளது. மேலும் பார்வையாளர்களாக வரும் நூற்றுக் கணக்கானோர் கழிப்பறை இன்றி அவதிப்படுகின்றனர்.
பரிசோதனை கூடத்திற்கு வரும் நோயாளிகளுக்கு சிறுநீர் பரிசோதனை செய்ய கழிப்பறைகள்
இல்லாததால் ஆண் மற்றும் பெண்கள் ஒரே கழிப்பறைக்கு செல்லும் நிலை உள்ளது.
மருத்துவமனையின் எந்த வளாகத்திலும் குடிநீர் குழாய் கிடையாது. சில வார்டுகளில் பிளாஸ்டிக் குடத்தில் தண்ணீர் வைத்துள்ளனர். இது சுகாதாரமற்றதாக உள்ளது. பிரதான கட்டிடம் அருகில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டிகளும் அகற்றப்பட்டு விட்டன. அதனால் நோயாளிகள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். நோயாளிகளுக்கு உதவியாளர்களாக உள்ளவர்கள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து குடிநீர் மற்றும் வெந்நீர் வாங்க செல்கின்றனர்.
ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கானோர் செல்வதால் கடைகள் மற்றும் ஓட்டல்களிலும் குடிநீர் தர மறுக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் வரும் மருத்துவமனையில் சிறிய சுத்திகரிப்பு நிலையம் அமைத்து குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கலாம். இல்லையேல் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மூலம் குடிநீர், வெந்நீர் இயந்திரங்களை அமைத்து கொடுக்கலாம். ஆஸ்பத்திரியில் குடிநீர் குழாய்கள் அமைத்து, நல்ல சுகாதாரமான குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி: தினகரன்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)