Wednesday, December 6, 2017
ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்படுமா நோய் பரப்பும் கொசுக்கள்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் புயல்
அறிவிப்பால் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ராமநாதபுரம் நகர்
பகுதியில் தாழ்வான பல இடங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. மழைநீரில் கொசுக்களின்
பெருக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
அரசு மருத்துவமனைகளில் தினந்தோறும் 100க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதவிர தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
மாவட்ட சுகாதார துறையில் பணியாற்றும் ஊழியர்
பற்றாக்குறையினால் நகர்,
கிராமப் பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணியில் மந்தம்
ஏற்பட்டு வருகிறது.
மாவட்ட சுகாதார துறையினர் கொசு ஒழிக்க உரிய நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment