Thursday, December 7, 2017
சமூக, மத நல்லிணக்கத்திற்கான விருது பெற விண்ணப்பிக்கலாம் -கலெக்டர்!!
சமூக, மத நல்லிணக்கத்திற்காக வழங்கப்படும்
கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜாதி மோதல்கள், கலவரங்களின் போது துரிதமாக
செயல்பட்டு மாற்று ஜாதியினரின் உயிர், உடமைகளை பாதுகாத்தும், உயிரை
பணயம் வைத்து மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள், அதற்கான ஆதாரங்களுடன் இந்த
விருது பெற விண்ணப்பிக்கலாம்.
ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று இந்த விருது
வழங்கப்படுகிறது. அவரவர் செய்த செயல்களின் அடிப்படையில்
கிரேடு 1 நிலைக்கு2 லட்சம் ரூபாய்
மற்றும் சான்றிதழ்,
இரண்டாம் நிலைக்கு 1 லட்சம் ரூபாய் மற்றும்
சான்றிதழ்,
மூன்றாம் நிலைக்கு 50 ஆயிரம் ரூபாய் மற்றும்
சான்றிதழ் வழங்கப்படுகிறது.
விருது பெற தகுதியானவர்கள், டிச.,15க்குள் மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும், என
கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment