(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, December 28, 2017

துவங்கியது ராமநாதரம் பொருட்காட்சி, ஏராளமானோர் கண்டுகளிப்பு!!

No comments :
ராமநாதபுரத்தில் குழந்தைகள், பெரியவர்களை மகிழ்விக்கும் வகையில் பொருட்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையொட்டி ராமநாதபுரத்தில் முதன் முறையாக ராட்சத கழுகு பொருட்காட்சி ரயில்வே கேட் அருகே தொண்டியப்பா எஸ்டேட் பகுதியில் கடந்த 24ம் தேதி முதல் நடந்து வருகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் வகையில் ஜுராசிக் பார்க், நீர் சறுக்கு, செயற்கை அருவி, படகு சவாரி, உள்ளிட்ட பல விளையாட்டுகள் உள்ளன.


இதுதவிர 3டி ஜாலங்கள், அதிவேக பைக் சாகசம், திகிலூட்டும் பேய் வீடு, எலக்ட்ரிக் பெண்மணி என பொழுதுபோக்கிற்கு அனைத்து அம்சங்களும் உள்ளன. புதுமையான மேஜிக் ஷோ நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. சிறப்பு உணவு வகைகளும் தயாரிக்கப்படுகின்றன.

பொருட்காட்சிக்கு வருபவர்களுக்கு மெஹந்தி, வண்ண மீன்கள், ஸ்டேசனரி, முகமுடி உள்ளிட்ட பொருட்களில் ஏதேனும் ஒன்று இலவசமாக வழங்கப்படுகிறது. மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை பொருட்காட்சி நடைபெறும். வரும் ஜன. 28 வரை இந்த பொருட்காட்சி நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள், குழந்தைகள் பொருட்காட்சியை ரசித்து வருகின்றனர்.


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment