Monday, December 11, 2017
கீழக்கரையில் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டி முற்றுகை போராட்டம்!!
கீழக்கரையில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி நேற்று நடந்த
முற்றுகை போராட்டத்தில் 25
பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
கீழக்கரை புதிய பஸ் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு அருகே இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளது. இது பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால், மூடக்கோரி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் சந்திரன் தலைமையில் நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தில்லை ரஹ்மான் முன்னிலை வகித்தார்.
மாநில துணை பொதுச்செயலாளர் சந்திரன் பேசுகையில், கடந்த மே 25ம் தேதி முற்றுகை போராட்டம் அறிவித்தபோது, 4 மாதங்களுக்குள் டாஸ்மாக் கடைகளை அகற்றுவதாக அதிகாரிகள் உறுதிமொழி கொடுத்தனர். அதன்பின்னர் டாஸ்மாக் கடையை மூட எந்த நடவடிக்கையும் எடுக்காததால் டாஸ்மாக் கடையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தியுள்ளோம். இன்னும் 10 நாட்களுக்குள் கடைகளை மூடாவிட்டால், தலைவர் ஜான்பாண்டியன் தலைமையில் மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்றார்.
போராட்டத்தில் மகளிர் அணியை சேர்ந்த 25 பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி:
திரு.தாஹீர், கீழை
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment