(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, December 12, 2017

ராமநாதபுரம் மாவட்டத்தில் முறைபடுத்தப்படாமல் வீணாகும் காவேரி குடிநீர் திட்டம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ.617 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் துவங்கப்பட்டது. அது முறைபடுத்தப்படாமல் உள்ளதால் பல ஊராட்சிகளில் தற்போதும் குடிநீர் பிரச்னை விசுவரூபம் எடுத்து வருகிறது.

ராமநாதபுரம் அருகே சத்திரக்குடி கிராமத்தில் காவிரி கூட்டு குடிநீருக்காக மேல்நிலை தொட்டி கட்டப்பட்டும் கடந்த பல மாதங்களாக குடிப்பதற்கு குடிநீர் இல்லாமல் உள்ளதால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தெருக்களில் பைப் வசதி இருந்தும் குடிநீர் முறையாக வருவது இல்லை. இருந்த குடிநீர் குழாய்களும் பலத்த சேதமடைந்த நிலையில் உள்ளன. 


இதனால் கிராம மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேல்நிலை தொட்டிக்கு செல்லும் பைப்புகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. இதனால் தொட்டிக்கு குடிநீர் செல்வது கிடையாது. இதனால் கிராமமக்கள் பைப்புகளில் வழியும் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர்.

குடிநீர் வாரியத்தினர் கிராம மக்களின் நலன் கருதி விரைவில் காவிரி கூட்டு குடிநீர் சீராக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கிராமமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment