(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, December 28, 2017

திருஉத்திரகோசமங்கை கோவில் திருவிழாவை முன்னிட்டு 02.01.2018 அன்று உள்ளூர் விடுமுறை!!

No comments :
ராமநாதபுரம்  மாவட்டம், கீழக்கரை வட்டம்,  திருஉத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு 02.01.2018 அன்று செவ்வாய்;கிழமை  ஒருநாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறைஆகவும்;, அதனை ஈடு செய்யும் பொருட்டு வரும் 20.01.2018 அன்று சனிக்கிழமை பணிநாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும்  20.01.2018 அன்று வழக்கம்போல் இயங்கும்.

இந்த உள்ளுர்; விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், 02.01.2018 செவ்வாய்;கிழமை அன்று ராமநாதபுரம்  மாவட்டத்திலுள்ள  கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான  அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.


மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment