Thursday, November 9, 2017
ஏர்வாடி தர்ஹா பகுதியில் காலாவதியான உணவு பொருள்கள் விற்பனை? !!
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா பகுதியில் உள்ள
கடைகளில் காலாவதியான உணவு பொருள்கள் விற்பனை ஜோராக நடைபெறுகிறது. இதனால் பொது
மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொது மக்கள் குற்றம் சாற்றுகின்றனர்.
ஏர்வாடியில் புகழ் பெற்ற மகான் குத்பு சுல்தான் செய்யது
இபுராகிம் தர்ஹா உள்ளது. இந்த தர்ஹாவிற்கு உள்ளுர் மற்றும் வெளியூர் மற்றும் கேரளா, ஆந்திரா, பாண்டிச்சேரி, மும்பை
போன்ற பல்வேறு வெளிமாநிலங்களிலிருந்தும் தினமும் 10 ஆயிரத்திற்கும்
மேற்பட்டவர்கள் மகானை தரிசனம் செய்வதற்கு வந்து செல்கின்றனர்.
இவர்கள் இங்குள்ள ஓட்டல்களில் சாப்பிட செல்லும்போது நேற்று மிஞ்சிய குழம்புகளை சுடவைத்து பக்தர்களுக்கு மீண்டும் தருவதாகவும் கடைகளில் தண்ணீர் வாங்கினால் ஐ.எஸ்.ஐ முத்தரை இல்லாத குடிதண்ணீர் பாட்டில் மற்றும் பாக்கெட்களில் விற்பனை செய்து வருவதாகவும் பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆகவே பக்தர்களின்
நலனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
செய்தி: தினகரன்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment