Monday, November 6, 2017
ராமநாதபுரத்தில் பாலிதீன் பைகளுக்கு தடை!!
ராமநாதபுரம் நகராட்சியில் பாலிதீன் கப், பைகளின்
பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த நவ., 1 முதல்
தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் நகராட்சிப்பகுதியில் கழிவு நீர் வடிகால்
முறையாக இல்லை. இதன் காரணமாக ரோடுகளில் கழிவு நீர் தேங்கியுள்ளது. இதில் பாலிதீன்
கப், பைகள் பயன்பாடு அதிகம் உள்ளதால், பல பகுதிகளில் டெங்கு
கொசுப்புழுவான 'ஏடிஸ்'
உருவாக காரணமாகிறது.
நகராட்சி சுகாதார அலுவலர் இளங்கோவன் தெரிவித்ததாவது:
கடைகள், வர்த்தக
நிறுவனங்கள்,
ஓட்டல்களில் பாலிதீன் பயன்படுத்த கலெக்டர் நவ., 1 முதல் தடை விதித்துள்ளார். நவ., 15 ம் தேதி வரை
சம்பந்தப்பட்ட இடங்களில் ஆய்வு நடத்தி பாலிதீன் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். 50 மைக்ரான் தடிமனுக்கு குறைவான பாலிதீன் பை பயன்படுத்த கூடாது. மீறி
பயன்படுத்தினால்,
சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், குற்றவியல்
நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என அவர் தெரிவித்துள்ளார்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment