Sunday, November 26, 2017
சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட ராமநாதபுரம்; எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் முதல்வர் அறிவிப்பு!!
ராமநாதபுரத்தில் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா
நடந்தது. முதல்வர்
பழனிசாமி எம்.ஜி.ஆர்., உருவப்படத்தை திறந்து வைத்து 81.09 கோடி ரூபாய் மதிப்பிலான, பணிகள் நிறைவு பெற்ற 135 திட்டங்களை துவக்கி வைத்தார்.
பழனிசாமி எம்.ஜி.ஆர்., உருவப்படத்தை திறந்து வைத்து 81.09 கோடி ரூபாய் மதிப்பிலான, பணிகள் நிறைவு பெற்ற 135 திட்டங்களை துவக்கி வைத்தார்.
மேலும் 2.62 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல்
நாட்டி 26,849 பயனாளிகளுக்கு 161.20 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவிற்கு சபாநாயகர் தனபால் தலைமை வகித்தார். துணை முதல்வர் பன்னீர்செல்வம், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். தமிழ் வளர்ச்சிதுறை செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார்.
ராமநாதபுரத்தில் நடந்த எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், ராமநாதபுரம் நகராட்சியை
சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தி முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.
அவரது புதிய அறிவிப்புகள்:-
பட்டினம்காத்தான், சக்கரக்கோட்டை, அச்சுந்தன்வயல் மற்றும் சூரன்கோட்டை ஆகிய நான்கு ஊராட்சிகளை இணைத்து ராமநாதபுரம் நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது.
திருவாடானை தாலுகாவில் 37 வருவாய்
கிராமங்கள், பரமக்குடி தாலுகாவில் 2 வருவாய்
கிராமங்களை சேர்த்து ஆர்.எஸ்.மங்கலத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா
உருவாக்கப்படும்.
மிளகாய் பயிருக்காக பரமக்குடி, முதுகுளத்துார், கமுதி ஒழுங்குமுறை விற்பனை
கூடங்களில் அனைத்து வசதிகளுடன் முதல்நிலை சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்படும்.
தேசிய வேளாண் சந்தை திட்டத்தில், மிளகாய், பருத்தி விவசாயிகள் பயனடையும் வகையில்,
பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கணினி வசதிகள், தரம் பிரிக்கும் அறை 1.33 கோடி ரூபாயில்
உருவாக்கப்படும்.
மாவட்டத்தில் நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகம் உள்ள 50
இடங்களில் 7.75 கோடி ரூபாய் செலவில் சுத்திகரிப்பு
நிலையங்கள் அமைக்கப்படும்.
ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்தில் கற்காத்தகுடி கிராமத்தில்
புதிய கால்நடை கிளை நிலையம் அமைக்கப்படும்.
ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான், உப்பூர் மற்றும் கீழக்கரை ஆகிய 3 இடங்களில் புதிய
துணை மின் நிலையங்கள்.
முதுகுளத்துார், அபிராமம்,
கமுதி, கடலாடி, பரமக்குடி
மற்றும் பெருங்குளம் துணை மின் நிலையங்களில் புதிய மின்மாற்றிகள் நிறுவப்படும்.
வேதாளை ஊராட்சியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம்.
ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ.,ஸ்கேன், சி.டி.ஸ்கேன், டயாலிசிஸ்,
எக்கோ கார்டியோகிராம் உள்ளிட்ட மருத்துவ கருவிகள் வாங்கப்படும்.
விபத்து காய சிகிச்சை மையம், மூப்பியல் பிரிவு துவக்கப்படும்.
பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு நவீன மருத்துவ கருவிகள், அறுவை அரங்கு அமைக்கப்படும்.
தேவிப்பட்டினம் அரசு மருத்துவமனையில் நவீன கண் பரிசோதனை மற்றும்
சிகிச்சை மையம் அமைக்கப்படும்.
பார்த்திபனுார், கமுதி
மற்றும் முதுகுளத்துாரில் புறவழிச்சாலைகள்.
ராமநாதபுரம்-கீழக்கரை சாலையில், ராமநாதபுரம்-உச்சிப்புளி சாலையில் ரயில் நிலையங்களுக்கிடையே ரயில்வே
மேம்பாலம்.
புத்தேந்தல்-ஏர்வாடி சாலையில் பாலம்.
ராமநாதபுரம்-எமனேஸ்வரம் சாலைமுதல் பி.கொடிக்குளம் சாலையில்
பாலம்.
முதுகுளத்துார்-உத்தரகோசமங்கை சாலையில் ஒரு பாலம்.
நத்தம்-நெடியமாணிக்கம் சாலையில் பாலம்.
கிழக்கு கடற்கரை சாலையான
நாகூர்-நாகப்பட்டினம்-ராமநாதபுரம்-துாத்துக்குடி சாலையில் ராமநாதபுரம்
மாவட்டத்திற்கு உட்பட்ட 120 கி.மீ., சாலை
மேம்பாடு செய்ய பணிகள் துவக்கப்பட்டு இதுவரை 56 கி.மீ.,க்கு 19.04 கோடி மதிப்பில் பணிகள் முடிந்துள்ளது.
மீதம் 64 கி.மீ., 21.76 கோடியில்
நடைபெற்று வருகிறது.
மேலபார்த்திபனுார் கிராமத்தில் பரளையாற்றின் குறுக்கே,அணைக்கட்டு கட்டி கீழச்சிவன்குளம் கண்மாய் மற்றும் இதர கண்மாய்களுக்கு
பாசன வசதி.
பெரிய யானைக்குளம் கிராமத்தில் பரளையாற்றின் குறுக்கே
அணைக்கட்டு கட்டி பெரியயானைக்குளம் கண்மாய் மற்றும் இதர கண்மாய்களுக்கு பாசன வசதி
அளிக்கப்படும்.
கட்டியவயல் கிராமத்தில் விருசுழி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு
கட்டி மல்லனுார் கண்மாய் உள்ளிட்டவைகளுக்கு பாசனம்.
கமுதி தாலுகா காக்குடி அருகே குண்டாற்றின் குறுக்கே
தடுப்பணை.
சாயல்குடி குண்டாற்றின் குறுக்கே தடுப்பணை.
நிகழ்ச்சியில் ராமநாதபுரம் எம்.பி., அன்வர்
ராஜா, அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், சீனிவாசன்,செல்லுார்
ராஜூ,எஸ்.பி.வேலுமணி,
கே.பி.அன்பழகன், எம்.சி. சம்பத்,ஜி.விஜயபாஸ்கர்,ஆர்.பி.உதயக்குமார், கடம்பூர்
ராஜூ,வெ.சரோஜா,
ஆர்.காமராஜ், என்.நடராஜன், கே.சி.கருப்பணன்,கே.டி.ராஜேந்திரபாலாஜி, க.பாண்டியராஜன்,கே.சி.வீரமணி, முன்னாள்
மாவட்ட செயலாளர் ஆர்.தர்மர், இளைஞர், இளம்பெண்கள் பாசறை
மாவட்ட செயலாளர் ஆர்.பால்பாண்டியன், உட்பட கட்சி நிர்வாகிகள்
பங்கேற்றனர்.
செய்தி: தினசரிகள்
No comments :
Post a Comment