(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, November 19, 2017

தபால்துறையில் கமிஷன் அடிபடையில் தனியார் முகவர்கள், நவ.,23 க்குள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :
தபால்துறையில் முதன்முறையாக தனியார் முகவர்களை நியமித்து கமிஷன் அடிப்படையில் தபால் சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காகவிண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் தலைமை தபால் நிலையத்தில் முதற்கட்டமாக இரண்டு தனியார் முகவர்கள் நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கோட்ட கண்காணிப்பாளர் உதயசிங் கூறுகையில், ' தனியார் முகவர்கள் குறைந்தது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். 


விண்ணப்பங்களை நவ.,23 க்குள் விரைவு தபாலில் அனுப்ப வேண்டும்.
இவர்கள் தபால் பட்டுவாடா செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு தபால் பதிவு செய்ய குறைந்த பட்சம் 3 ரூபாய், சேகரிக்க 3 ரூபாய், பட்டுவாடா செய்ய 5 ரூபாய் என வழங்கப்படும். 

இதே போல், அனைத்து அஞ்சலகங்களிலும் விரைவில் தனியார் முகவர்கள் நியமிக்கப்பட உள்ளனர், என்றார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment