Thursday, November 9, 2017
ராமநாதபுரம் மாவட்டத்தில் நவ.,11ல் பொது வினியோகத் திட்ட குறை தீர் கூட்டம்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் நவ.,11ல் பொது வினியோகத் திட்ட குறை தீர்க்கும் கூட்டங்கள் நடக்கிறது.
பொது வினியோகத்திட்டத்தின் கீழ் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் தாலுகா வாரியாக கிராமங்களில் சுழற்சி முறையில் பொது வினியோகத்திட்ட குறை தீர் கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
அதன்படி, நவ.,11ல் ராமநாதபுரம் தாலுகா
மீனாட்சிபுரம்,
ராமேஸ்வரம் தாலுகாவில் பாம்பன்-சின்னப்பாலம்,
திருவாடானை-ஓரிகோட்டை,
பரமக்குடி-தெளிச்சாத்தநல்லுார்,
முதுகுளத்துார் டவுன்,
கடலாடி தாலுகாவில் எஸ்.மாரியூர்,
கமுதி-திம்மநாதபுரம்,
கீழக்கரை தாலுகா பாரதிநகர் ஆகிய இடங்களில் குறை தீர்
கூட்டம் நடக்கிறது.
காலை 10:00 மணிக்கு நடக்கும் கூட்டத்தில்,
ஸ்மார்ட் ரேஷன் கார்டில் பிழை திருத்தம்,
பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம்,
முகவரி மாற்றம் செய்து பயனடையலாம்,
என கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment