Monday, October 23, 2017
இந்திய ராணுவத்தில் இளைஞர்களுக்கு பணி வாய்ப்பு!!
இந்திய ராணுவத்தில் பல்வேறு பயிற்சி சேர்க்கைகளின்
அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் படைப்பிரிவுகளில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.
தற்போது ஜூனியர் கமிஷன்டு ஆபீசர் (மதபோதகர்) பயிற்சி 85-86 சேர்க்கையின்படி,
மதபோதகர் பணியில் இளைஞர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பண்டிட் பிரிவில் 63 பேரும்,
பண்டிட் (கூர்கா) - 3 பேர்,
பத்ரி - 1,
மவுலவி - 2,
மவுலவி (ஷியா) - 1,
புத்த துறவி -1,
கிரந்தி - 2 பேரும்
சேர்க்கப்படுகிறார்கள்.
விண்ணப்பதாரர்கள் 1-10-2018 தேதியில் 27 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், குறிப்பிட்ட பிரிவு மதபோதகருக்கு அவசியமான கல்வித்தகுதி- சான்றுகளை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 160 செ.மீ. உயரமும், 77 செ.மீ. மார்பளவும் பெற்றிருக்க வேண்டும். 5 செ.மீ. விரிவடைய வேண்டும். 1600 மீட்டர் தூரத்தை 8 நிமிடத்தில் ஓடிக்கடக்கும் உடல்திறன் சோதனை நடத்தப்படும்.
சான்றிதழ் சரிபார்த்தல், எழுத்து தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 8-11-2017-ந்
தேதியாகும்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment