(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, October 30, 2017

பாம்பன் பாலத்தில் தொடரும் விபத்துகள் , சுற்றுலா வேன் கவிழ்ந்து பலர் படுகாயம்!!

No comments :
திருப்பூரில் இருந்து சகாதேவன் என்பவர் தனது குடும்பத்தை சேர்ந்த 15 பேருடன் ஒரு சுற்றுலா வேனில் ராமேசுவரம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். இவர்கள் நேற்று அதிகாலை 6 மணி அளவில் பாம்பன் ரோடு பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வேகத்தடை அருகே நிலைதடுமாறி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை தடுப்பில் மோதி பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


இதையறிந்த அக்கம் பக்கத்தினரும், போலீசாரும் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் வேன் டிரைவர் ராஜ்குமார் என்பவருக்கு கால் முறிந்தது. இதேபோல ரஞ்சித் (வயது 30) என்பவருக்கு கை முறிந்தது. மேலும் வேனில் இருந்த சகாதேவன் (45), மணிமேகலை(50), சந்திரமுகி(40) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். உடனே காயமடைந்த அனைவரும் ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் 5 பேரும் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.




இந்த விபத்து ஏற்பட அதிக உயரம் கொண்ட வேகத்தடையும், தடுப்புமே காரணம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். முன்பு பாம்பன் பாலத்தில் வழுவழுப்பான சாலையால் அதிக விபத்துகள் நடந்ததாகவும், தற்போது இந்த தடுப்பாலும், உயரமான வேகத்தடையாலும் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவதுடன், விபத்துகள் நடக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் அப்பகுதியினர் தெரிவித்தனர்.

மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment