(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, October 26, 2017

அழிந்து வரும் பனை மரங்களால், பாதிக்கபடும் பனைத்தொழில் குடும்பங்கள்!!

No comments :
அழிந்து வரும் பனை மரங்களால், இதனை சார்ந்த தொழில் செய்யும் ஐந்து லட்சம் பனைத்தொழிலாளர் பாதிப்படைந்துள்ளனர்.
தமிழகத்தில் ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாமக்கல், சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் 5 கோடி பனைமரங்கள் உள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 கோடி பனைமரங்கள் இருந்தது. 50 லட்சம் மரங்கள் செங்கல் காளவாசல், சாயப்பட்டறைகளுக்கு எரி பொருளுக்காக அழிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பனை மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. நாளுக்கு நாள் பனை மரத்தின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. பனை மரத்தொழிலும் பாதிக்கப்பட்டு வருகிறது.


ஆண்டுக்கு ஒரு பனை மரத்தில் 10 பாலைகள் வரை வரும். இதனை சீவித்தான் பதநீர் சேகரிக்கப்படும், பனை ஓலைகள் மூலம் பாய், பெட்டி, போன்ற பொருட்கள் செய்ய முடியும். கடந்த கால வறட்சியினால், பாலைகள் விடுவது குறைந்தது. இதன் மூலம் பெட்டிகள், ஓலை பாய்கள், போன்ற பொருட்கள் செய்ய முடியாத நிலை உள்ளது. பனைத்தொழிலை நம்பியுள்ள குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 

பனை மரங்களை காக்க அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது, சம்பந்தபட்ட் துறைகள் கவனிக்குமா?


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment