(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, October 25, 2017

பழுதாகி நிற்கும் பேட்டரி கார்கள், அவதிப்படும் பக்தர்கள்!!

No comments :
ராமேசுவரம் கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

கோவிலின் ரத வீதிகளில் அரசு பஸ்கள் உள்ளிட்ட எந்தவொரு வாகனங்களும் செல்ல போலீசாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு வரும் பகதர்களின் வசதிக்காக கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் இருந்து பக்தர்கள் செல்ல வசதியாக ரத வீதிகளில் நகராட்சியின் சார்பில் பேட்டரி கார்கள் கடந்த வருடங்களுக்கு மேலாகவே இயக்கப்பட்டு வந்தன.
ஒரே நேரத்தில் பேர் அமர்ந்து பயணம் செய்யும் அந்த ஒரு பேட்டரி காரில் ஒருவருக்கு ரூ.கட்டணம் என்ற அடிப்படையில் பேட்டரி கார்கள் ரத வீதிகளில் இயக்கப்பட்டு வந்தன. இதே போல் ராமேசுவரம் கோவில் சார்பிலும் பேட்டரி கார்கள் இயக்கப்பட்டு வருகின்றன.



இந்தநிலையில் ராமேசுவரம் நகராட்சியின் சார்பில் இயக்கப்பட்டு வந்த 5 பேட்டரி கார்களும் பழுதாகி கடந்த 5 மாதத்திற்கு மேலாக நிற்கின்றன. ரூ.25 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட பேட்டரி கார்களை நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் பழுதாகி கிடக்கின்றன. மேலும் பழுதான பேட்டரி கார்களை சரி செய்து இயக்கவோ அல்லது புதிய பேட்டரிகார்கள் வாங்கி இயக்கவோ, நகராட்சி நிர்வாக அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.

இதனால் கோவிலுக்கு வரும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பு மக்கள் அவதியடைந்து வருகின்றனர். பேட்டரி கார்கள் இயக்கப்படாததால் ரத வீதிகளில் நீண்ட தூரம் நடந்து சென்று அவர்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment