Thursday, October 19, 2017
கீழக்கரை முக்கிய சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி!!
கீழக்கரை நகராட்சியில் 50 ஆயிரத்திற்கும் அதி கமானோர்
வசித்து வருகின்றனர். 21
வார்டுகள் உள்ளன. மேலும் வளர்ந்து வரும் புறநகர் பகுதிகள் ஏராளமாக உள்ளன.
நகராட்சி அலுவலகத்தின் ஒருபகுதியில் தாலுகா அலுவலகம்
செயல்பட்டு வருகிறது. 26
வருவாய் கிராமங்களை உள் ளடக்கிய கிராமப்புற, புறநகர்பகுதிகளிலிருந்து
ஏராளமானோர் பஸ்கள்,
டூவீலர், ஆட்டோக்கள் மூலம் அலுவலகத்திற்கு வருகின்றனர்.
இங்கு டிராபிக் போலீ சாருக்கான தனிப்பிரிவு இல்லாததால் சட்டம் ஒழுங்கு போலீசாரே எல்லாப் பணிகளையும் செய்வதால், பகல், இரவு நேர ரோந்தில் தொய்வு ஏற்பட்டு வருகிறது.
கூட்ட நெரிசல் அதிகம் உள்ள வி.ஏ.ஓ., சாவடி, புதிய பஸ் ஸ்டாண்ட், வள்ளல் சீதக்காதி சாலை, இந்து பஜார், கமுதி பால் கடை, வங்கிகள் அதிகம் உள்ள முஸ்லிம் பஜார் ஆகிய இடங்களிலும், காலை 8:00 முதல் 10 :00 வரையிலும், மாலையில் 4:30 முதல் 7:30 மணி வரையிலும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.
வளர்ந்து வரும் நகரமாக கீழக்கரை உள்ளதால் நகரின் முக்கிய
வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம் பொருத்தப்பட வேண்டும். இதனால் இரவு
நேரங்களில் குற்றச் செயல்கள் நடைபெறுவது பெருமளவு கட்டுப் படுத்தப்படும்.
பள்ளிக்கூடங்களுக்கு சைக்கிள், பள்ளி வேன்களில் ஏராளமானோர் சென்று வருகின்றனர். ஒவ்வொரு கடைகளின் முன்புறமும் டூவீலர்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களை நிறுத்தி வைப்பதால், வாகனங்கள் செல்ல வழியில்லாமல் நெரிசல் ஏற்படுகிறது.
எனவே குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வரு
கின்றனர்.
எனவே குறைகளை போக்க போலீசாருடன் இணைந்து நகராட்சி நிர்வாகம் சாலையோர ஆக்கிரமிப்புக்களை அகற்றி நிலையான போக்குவரத்திற்கு வழி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.
எனவே குறைகளை போக்க போலீசாருடன் இணைந்து நகராட்சி நிர்வாகம் சாலையோர ஆக்கிரமிப்புக்களை அகற்றி நிலையான போக்குவரத்திற்கு வழி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.
செய்தி: திரு. தாஹீர், கீழை
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment