(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, October 17, 2017

சித்திரகலா ஓவியப்போட்டி, கடைசி நாள் நவம்பர் 8ம் தேதி!!

No comments :


போட்டியின் பெயர் : சித்திரகலா போட்டியின்
தொடக்கம் : இப்போதே தொடங்குங்கள்
பங்கேற்பாளர் : சித்திரகலாவில் பங்கேற்க 6 முதல் 17 வயது வரையுள்ளோர் பங்கேற்கலாம்



தலைப்பு : சித்திரகலா ஓவியப் போட்டியின் தலைப்பானது குழந்தைகளின் வயதுகேற்ப மாறுபடும்
4 வயது முதல் 7 வரை ( நானும் எனது நட்பும்)
8 வயது முதல் 10 வரை ( எனது விருப்ப விளையாட்டு பகுதி)
11 வயது முதல் 13 வரை ( எனது கனவு)
14 வயது முதல் 17 வரை (எனது நகரம் ) சித்திரகலாவில் பங்கேற்க மாணவர்கள் தங்களது ஓவியப்படைப்புகளை அனுப்ப எங்களின் அதிகாரபூர்வ தளத்தில் studentscornor@oneindia.co.in  பதிவு செய்ய வேண்டும்

விதிமுறைகள் : மாணவர்கள் உங்களது பள்ளி மற்றும் இல்ல முகவரி சரியாக எழுதியிருக்க வேண்டும் . விவரங்கள் சரியாக இல்லையெனில் உங்களது படைப்புகள் நிராகரிக்கப்படும் 

மாணவர்கள் உங்களது படைப்புகளில் மேல் சித்திரகலா என்ற தலைப்பின் கீழ் உங்கள் வயதுகேற்ற கொடுக்கப்பட்டுள்ள தலைப்பை பின்ப்பற்றி ஓவியம் தீட்டப்பட்டிருக்க வேண்டும் .

வரையப்பட்ட ஓவியங்களை சிறப்பான தெளிவாக புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும் . மாணவர்களின் சொந்தப்படைப்பாக இருக்க வேண்டும் . நாங்கள் உங்களின் படைப்பாற்றலை அங்கிகரிக்கின்றோம் நீங்களும் உங்களது படைப்பாற்றலை திறம்பட வெளிப்படுத்துங்கள் .

பெற்றோர்களே நீங்களும் உங்களது மழலை அரும்புகளுக்கு உதவுங்கள் . மாணவர்களின் படைப்பாற்றைலை அனுப்பும் பொழுது சித்திரகலா என்ற தலைப்பின் கீழ் சிறப்பான ஓவிய புகைப்படத்தை எடுத்து இமெயிலில் அனுப்ப வேண்டும் .

காலக்கெடு : மாணவர்கள் தங்கள் படைப்பை அனுப்ப இறுதி தேதி நவம்பர் 8 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் . நவம்பர் 14 ஆம் நாள் சித்திரகலா ஒவியப்போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்படும் .

பரிசு : வெற்றி பெறும் சிறப்பான ஓவியங்கள் எங்கள் கேரியர் இந்தியா தளத்தில் உலா வரும் அத்துடன் வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றி சான்றிதழ் அளிக்கப்படும் .


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment