Tuesday, September 26, 2017
IAS தேர்வுக்கு மாதம் ரூ.2,000/- உதவித்தொகையுடன் 6 மாத இலவச பயிற்சி!!
IAS தேர்வுக்கு மாதம் ரூ.2,000/- உதவித்தொகையுடன் 6 மாத இலவச பயிற்சி வழங்குகிறது பாதியார் பல்கலைக்கழகம்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 05-11-2017
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Sunday, September 24, 2017
ராமநாதபுர மாவட்டத்தில் பனைமர விதைகளை நடும் பணிகளை கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்!!
ராமநாதபுரம் பெரிய கண்மாயில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார
அமைப்பு சார்பில் கண்மாய் கரையினை பலப்படுத்தும் விதமாக பனைமர விதைகளை நடும்
பணிகளை மாவட்ட கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
கண்மாய்கள்,
ஊருணிகள் ஆகியவற்றின் கரைகளை பலப்படுத்தும் விதமாக நீர்நிலைகளின் கரைகளில்
பனைமரங்களை வளர்த்து இயற்கை அரணாக பாதுகாக்கும் பழக்கம் நம் முன்னோர்களிடத்தில்
இருந்து வந்தது.
அதனை பின்பற்றி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள
நீர்நிலைகளின் கரைகளில் மண் அரிப்பினை தடுத்து பலப்படுத்தும் விதமாக, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின்
மூலம் நீர்நிலைகளின் கரைகளில் பனை விதைகளை விதைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார
அமைப்பின் கீழ் மொத்தம் 640 கண்மாய்கள்
உள்ளன. இந்த கண்மாய்களின் கரைகளை பலப்படுத்தும் வகையில் மொத்தம் ஒரு லட்சம் பனை
விதைகளை விதைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2016–ம்
நிதியாண்டில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் கீழ் உள்ள கண்மாய்களில், 33 கண்மாய்கள் தேர்வு
செய்யப்பட்டு கண்மாய்கள் பழுது பார்த்து,
புனரமைத்து தரப்படுத்தும் திட்டத்தில் கரைகள் பலப்படுத்தும் பணிகள் நிறைவு
பெற்றுள்ளன. முதல்கட்டமாக இந்த கண்மாய்களில் 10,000 பனை விதைகள் விதைக்கப்பட உள்ளன.
தேசிய ஊரக வேலைத்திட்ட பணியாளர்கள் மற்றும் அந்தந்த
பகுதிகளில் உள்ள நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களைக்கொண்டு இப்பணிகள்
மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகள் விரைவில் விரிவுபடுத்தப்பட்டு மாவட்டத்தில் உள்ள
அனைத்து நீர்நிலைகளிலும் செயல்படுத்தும் விதமாக பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு
அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்
வெங்கடகிருஷ்ணன், மாவட்ட
கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜா,
வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் தாமஸ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சிவராமகிருஷ்ணன் உள்பட
அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Saturday, September 23, 2017
மதுரை-ராமேஸ்வரம் மார்க்கத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க தொடரும் கோரிக்கை!!
மதுரை-ராமேஸ்வரம் மார்க்கத்தில் பகல் நேரங்களில் கூடுதல்
ரயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை-ராமேஸ்வரம் மார்க்கத்தில் அகல ரயில்பாதையில் தற்போது மூன்று நேரங்களில் மட்டுமே பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் வழக்கமாக கூட்டம் அலைமோதும். ரயில் பெட்டிகளின் கழிவறைகள், ஏறும், இறங்கும் வழிகள், நடந்து செல்லும் இடங்கள் என அனைத்திலும் அமர்ந்து பயணிக்கின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மார்க்கத்தில் கூடுதலாக பயணிகள் ரயில்கள் இயக்க வேண்டும், தற்போது இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என மாவட்ட மக்கள், வர்த்தக சங்கத்தினர், ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு காலை, நண்பகல், மாலை நேரங்களிலும், இதேபோல் ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு 3 வேளைகளிலும் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மார்க்கத்தில் கூடுதலாக பயணிகள் ரயில்கள் இயக்க வேண்டும், தற்போது இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என மாவட்ட மக்கள், வர்த்தக சங்கத்தினர், ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு காலை, நண்பகல், மாலை நேரங்களிலும், இதேபோல் ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு 3 வேளைகளிலும் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது.
கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் மானாமதுரை, ராமேஸ்வரம் அகல ரயில் பாதையில் ரயில்கள் இயக்கத் துவங்கியபோது மதுரை, ராமேஸ்வரம் மார்க்கத்தில் காலை, மாலை என இரண்டு பயணிகள் ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. கடந்த 2009 முதல் நள்ளிரவு ரயில் இயக்கப்பட்டது. பின்பு அந்த ரயில் நண்பகல் ரயிலாக மாற்றப்பட்டது. இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்க தொடங்கி 9 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், இந்த மூன்று பயணிகள் ரயிலே மதுரை, ராமேஸ்வரம் மார்க்கத்தில் இயக்கப்படுகிறது. இது பயணிகளுக்கு போதுமானதாக இல்லை.
அதனால் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் பகல் நேரத்தில் கூடுதலாக 2 ரயில்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Wednesday, September 20, 2017
TNPSC அறிவித்துள்ள குரூப்-V A பணியிடங்கள்!!
TNPSC
அறிவித்துள்ள குரூப்-V A பணியிடங்கள்!!
விண்ணப்பிக்க செப்.26
கடைசி நாள்
அரசின் செயலகத்தில் காலியாக உள்ள 50 குரூப்-V A பணியிடங்களான இளநிலை உதவியாளர், உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து 26க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant in The Departments of Secretariat (other than Law and Finance)
காலியிடங்கள்: 54
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20.200 + தர ஊதியம் ரூ.5,2,600
தேர்வுக் கட்டணம்: ரூ.100
பணி: Assistant in The Departments of Secretariat (other than Law and Finance)
காலியிடங்கள்: 54
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20.200 + தர ஊதியம் ரூ.5,2,600
தேர்வுக் கட்டணம்: ரூ.100
பதிவிக் கட்டணம்: ரூ.150. (ஒருமுறை பதிவை செய்யாதவர்களுக்கு மட்டும்) எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வயதுவரம்பு: 31.08.2017 தேதியின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35க்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினர் 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையங்கள்: சென்னை, கோயமுத்தூர், மதுரை
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.09.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 25.11.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2017_19_not_eng_Group_V_%20A.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நுழைவு கட்டணம் வசூலை நிறுத்த கோரிக்கை!!
ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சட்டத்திற்கு புறம்பாக
செயல்பட்டு வரும் வாகன நுழைவு கட்டணம் வசூலை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க
பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ராமேஸ்வரத்திற்கு வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா
பயணிகள் மற்றும் பக்தர்களின் வாகனங்களுக்கு பாம்பன் பாலத்தில் செல்வதற்காக தேசிய
நெடுஞ்சாலை துறையினரால் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. கடந்த 28 ஆண்டுகளாக கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த
ஜனவரி மாதத்துடன் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்வதை தேசிய நெடுஞ்சாலை நிறுத்தி
விட்டது.
ஆனால் தேசிய நெடுஞ்சாலை வழியாக ராமேஸ்வரத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கு நகராட்சி நிர்வாகத்தினால் நுழைவுக் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம் வாகன நுழைவு கட்டணம் வசூல் செய்வதை நிறுத்திடவும், சாலையோரத்தில் உள்ள கட்டண வசூல் மையத்தை அகற்றவும் பலமுறை தேசிய நெடுஞ்சாலை உத்தரவிட்டும் நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து வசூல் செய்து வருகிறது.
ராமேஸ்வரம் நகராட்சி பேருந்து நிலையத்திற்குள் செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யும் உரிமம் என்று டெண்டர் விட்டு தேசிய நெடுஞ்சாலையில் வரும் அனைத்து வாகனங்களுக்கும் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி நிர்வாகத்தினால் வாகன நுழைவு கட்டணம் வசூலிக்க தனியாருக்கு டெண்டர் விடப்பட்டபோது, டெண்டர் எடுத்தவர்கள் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக பணம் கேட்டு வாகனங்களில் வருபவர்களை மிரட்டி பணம் பறித்ததால் மாவட்ட நிர்வாகம் டெண்டரை ரத்து செய்தது. தொடர்ந்து நகராட்சி நிர்வாகமே ஊழியர்களை நியமித்து நுழைவு கட்டணம் வசூல் செய்து வந்தது. சில ஆண்டுகள் கழித்து நுழைவு கட்டணம் வசூலிப்பதில் ஊழியர்கள் தவறு செய்வதாக கூறிய நகராட்சி மீண்டும் தனியாருக்கு டெண்டர் விட்டது.
பொதுமக்களிடம் இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியும் நகராட்சி நிர்வாகம் இதனை அலட்சிய படுத்தி விட்டு தனியாருக்கு டெண்டர் விட்டது. அடுத்தடுத்து டெண்டர் எடுத்தவர்கள் மீண்டும் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக புகார் எழுந்ததால் வாகனங்களுக்கு வசூல் செய்யப்பட்டு வந்த கட்டண தொகையை இருமடங்காக்கி நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இதன் மூலம் டெண்டர் எடுத்தவர்கள் கோடிக்கணக்கில் பணம் பார்ப்பதற்கு வழிவகை செய்யப்பட்டது. மேலும் நாட்டிலேயே எந்த டோல்கேட்டிலும் இல்லாத வகையில் கார், வேன்களுக்கு ரூ.100ம், லாரி உள்ளிட்ட ஆறுசக்கர வாகனங்களுக்கு 150ம் கட்டணமாக வசூல் செய்யப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவது ஒருபுறம் என்றால்
மற்றொருபுறம் கட்டண உயர்வால் நகராட்சி நிர்வாகத்திற்கு எவ்வித ஆதாயமும் இல்லை
என்பதும் நகராட்சி நிர்வாக அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். தனியார் பணம்
சம்பாதிக்க ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் நகராட்சி அதிகாரிகளை கண்டித்து
மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்யப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க
வில்லை.
ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நகராட்சி டோல்கேட் என்ற பெயரில் அதிகளவில் வாகன நுழைவு கட்டணம் வசூல் செய்யப்படுவது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறையினர் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்க வலியறுத்தியள்ளனர். மேலும் வாகன நுழைவு கட்டணம் வசூல் செய்வதற்கும் தடை விதித்தும், கட்டண வசூல் மையத்தை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இருந்து அகற்றவும் நகராட்சி நிர்வாகத்திற்கு பல முறை உத்தரவிட்டுள்ளனர். ஆனால் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து வசூல் செய்ய அனுமதித்து வருகிறது. ரூ.22 கோடி செலவழித்து பாலம் கட்டிய தேசிய நெடுஞ்சாலை துறையே குறைந்த வருவாய் கிடைத்ததோடு பாம்பன் பாலம் வாகன கட்டணம் வசூலை நிறுத்தி விட்டது. ஆனால் தேசிய நெடுஞ்சாலையில் சட்டத்திற்கு புறம்பாக நுழைவு கட்டணம் என்ற பெயரில் நடந்து வரும் பகல் கொள்ளையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இம்மாத இறுதியில் நகராட்சி வாகன நுழைவு கட்டண வசூல் டெண்டர் முடிவுறும் நிலையில் இதனை நீட்டிக்காமல் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நலன் கருதி வாகன கட்டண வசூலை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நகராட்சி டோல்கேட் என்ற பெயரில் அதிகளவில் வாகன நுழைவு கட்டணம் வசூல் செய்யப்படுவது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறையினர் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்க வலியறுத்தியள்ளனர். மேலும் வாகன நுழைவு கட்டணம் வசூல் செய்வதற்கும் தடை விதித்தும், கட்டண வசூல் மையத்தை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இருந்து அகற்றவும் நகராட்சி நிர்வாகத்திற்கு பல முறை உத்தரவிட்டுள்ளனர். ஆனால் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து வசூல் செய்ய அனுமதித்து வருகிறது. ரூ.22 கோடி செலவழித்து பாலம் கட்டிய தேசிய நெடுஞ்சாலை துறையே குறைந்த வருவாய் கிடைத்ததோடு பாம்பன் பாலம் வாகன கட்டணம் வசூலை நிறுத்தி விட்டது. ஆனால் தேசிய நெடுஞ்சாலையில் சட்டத்திற்கு புறம்பாக நுழைவு கட்டணம் என்ற பெயரில் நடந்து வரும் பகல் கொள்ளையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இம்மாத இறுதியில் நகராட்சி வாகன நுழைவு கட்டண வசூல் டெண்டர் முடிவுறும் நிலையில் இதனை நீட்டிக்காமல் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நலன் கருதி வாகன கட்டண வசூலை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கடிதம் மூலம்
அறிவுறுத்தியும் வாகன நுழைவு கட்டண வசூலை நிறுத்தவில்லை. உயர் அதிகாரிகளும் இதற்கு
ஆதரவாக இருக்கின்றனர். மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால், தமிழக
அரசு அதிகாரிகள்தான் இதனை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய
நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆர்கானிக் சேலைகள்!!
ராமநாதபுரம் கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் அனைத்தும் இயற்கை
முறையில் தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் சேலைகள் தீபாவளி பண்டிகைக்காக அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது.
கைத்தறி ரகங்களின் விற்பனை அதிகரிக்கவும், நெசவாளர்கள்
பயன் பெறவும்,
பண்டிகை காலங்களில் 30 சதவீதம் தள்ளுபடி விலையில்
பட்டு, பருத்தி ரகங்களுக்கு வழங்கப்படுகிறது. பல வித வடிவமைப்புகளில் பருத்தி, பட்டுசேலைகள், படுக்கை
விரிப்புகள்,
தலையணை உறைகள் பல வண்ணங்களில், புதிய
டிசைன்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
உடல் நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்ப
ரசாயண உரங்கள் இல்லாமல்,
இயற்கையில் விளைவிக்கப்பட்ட பருத்தியில் இருந்து, இயற்கை
சாயமிட்ட ஆர்கானிக் புடவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பாரம்பரிய ரகங்களை
புதுப்பிக்கும் விதமாக கண்டாங்கி, செட்டிநாடு, சுங்கிடி
சேலைகள் விற்பனைக்கு உள்ளன. ஆடவர்களை கவரும் விதமாக லினன், பருத்தி
சட்டைகள், பல வண்ணங்களில் வந்துள்ளன.
தங்கமழை திட்டத்தில் செப்., 15 முதல்
2018 ஜன.,
31 ம் தேதி வரை 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள
துணி வாங்குபவர்களுக்கு கூப்பன் வழங்கப்படும். இதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு
பதிலளிக்கும் வாடிக்கையாளர்களில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தங்க
நாணயம் பரிசாக வழங்கப்படும். இந்த சிறப்பு விற்பனையை கலெக்டர் நடராஜன் துவக்கி
வைத்தார்.
நிர்வாககுழு உறுப்பினர்கள் வி.ஜி. அய்யான், எம்.எம்.சுந்தரி, மண்டல
முதுநிலை மேலாளர் எம்,
சண்முகசுந்தரம், மேலாளர் எம்.பழனிச்சாமி, துணை
மண்டல மேலாளர் பி.ஸ்டாலின்,
விற்பனையாளர் பாண்டியம்மாள் ஆகியோர் பங்கேற்றனர் .
கடந்த ஆண்டு விற்பனை 81.63 லட்சம் ரூபாயாக
இருந்தது. இந்தாண்டு 1.03
கோடி ரூபாயாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, விற்பனை
துவக்கப்பட்டுள்ளது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Sunday, September 17, 2017
கீழக்கரையில் நாளை (18-9-2017) புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்!!
கீழக்கரையில் நாளை (18-9-2017) மாலை, தெற்குத்தெரு இஸ்லாமியா பள்ளி வளாகத்தில் பெண்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்.
தகவல்: திரு. தாஹீர், கீழை
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Friday, September 15, 2017
சென்னையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!!
சென்னையில் வரும் 23ம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!!(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Thursday, September 14, 2017
பாம்பன் பாலத்தின் தடுப்புச்சுவரில் அரசு பஸ் மோதல்; “100–வது விபத்து” என கேக் வெட்டி இளைஞர்கள் அதிருப்தி!!
ராமநாதபுரம் மாவட்டத்தின் மண்டபம் கடற்கரை பகுதியை, ராமேசுவரம்
தீவுடன் இணைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது பாம்பன் ரோடு பாலம். இந்த பாலம்
அமைக்கப்பட்டு 29
ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில், கடந்த
சில மாதங்களுக்கு முன்பு ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய தொழில்நுட்பத்துடன்
கூடிய சாலை அமைக்கப்பட்டது.
இந்த சாலை வழுவழுப்பாகவும், வெயிலில் உருகும்
தன்மையுடனும் இருந்தது. இதனால் கடந்த 3 மாதங்களில் மட்டும் 15–க்கும் மேற்பட்ட விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இந்த விபத்துகளில் 2 பேர்
உயிரிழந்துள்ளனர். இதுதவிர இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் பலர் விழுந்து
படுகாயமடைந்துள்ளனர். தினமும் இந்த பாலத்தில் தொடர்ந்து சிறுசிறு விபத்துகள் நடந்த
வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் மதுரையில் இருந்து நேற்று ராமேசுவரம் நோக்கி
வந்த அரசு பஸ் பாம்பன் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி
தடுப்புச்சுவரில் மோதி அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி நின்றது.
இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம்
ஏற்படவில்லை.
பஸ்சின் முகப்பு பகுதி மட்டும் சேதமடைந்தது. இந்த பஸ்சை
ஆண்டிப்பட்டியை சேர்ந்த பாஸ்கரன்(வயது 58) என்பவர் ஓட்டி வந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பாம்பன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து
வந்து பார்வையிட்டனர். மேலும் போக்குவரத்து கழக அதிகாரிகள், தேசிய
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதனிடையே அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இது பாம்பன்
பாலத்தில் நடந்துள்ள 100–வது விபத்து என்று கூறி கேக் வெட்டி அப்பகுதி மக்களுக்கு வழங்கி தங்களது
அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
மேலும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டுநர்களிடம் பாம்பன்
பாலத்தில் போடப்பட்டுள்ள சாலையின் தன்மை குறித்தும், மெதுவாக செல்லும்படியும்
விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பாம்பன் பாலத்தில் வழுவழுப்பான சாலையை அகற்றி விட்டு தரமான
சாலை அமைக்க வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு
செல்வதற்காகவே இதுபோன்று கேக் வெட்டி வலியுறுத்தியதாக அந்த இளைஞர்கள்
தெரிவித்தனர்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர்
கூறும்போது,
பாம்பன் பாலத்தில் வழுவழுப்பான சாலையை அகற்றும் பணி தொடங்கி
நடைபெற்று வருகிறது. விரைவில் தரமான சாலை அமைக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
செய்தி: தினத்தந்தி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Tuesday, September 12, 2017
ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவு பொருட்களின் தரம் குறித்து புகார் அளிக்க வாட்ஸ் அப் எண்!!
உணவு பொருட்களின் தரம் குறித்து புகார் அளிக்க புதிய வாட்ஸ்
அப் எண் அறிமுகம்.
இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உணவு பொருட்களின் தரம்
குறித்து தொடர்ந்து பல்வேறு புகார் வந்ததையடுத்து மாவட்ட ஆட்சியர் நடராஜன் உணவு
பொருட்களின் தரம் குறித்து புகார் தெரிவிக்க புதிய வாட்ஸ் அப் எண் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது.
இதில் கோடைகாலங்களில் விற்பனை செய்யப்படும் கார்பைடு
கல்வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம்,தரமில்லாத குடிநீர் கேன்கள்,பால்,பால்
பொருட்கள்,அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் தொடர்பான
புகார்களை
94440
42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர்
தெரிவித்துள்ளார்.
செய்தி: திரு. தாஹீர், கீழை
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
குவைத்தில் நடைபெறும் முப்பெரும் விழா!!
குவைத்தில் முப்பெரும் விழா!!
-
சமூக / கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி - கல்வி
கேள்வி - பதில் அரங்கம்
-
K-Ticன் 13ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி - குவைத் அமைப்புகளின் நிர்வாகிகளின் வாழ்த்தரங்கம்
-
ஹிஜ்ரா / இஸ்லாமிய புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி
இன்ஷா அல்லாஹ்... செப்டம்பர் 21, 2017 வியாழக்கிழமை முதல் செப்டம்பர் 23, 2017 சனிக்கிழமை வரை...
தமிழகத்திலிருந்து வருகை தரும் சிறப்பு விருந்தினர்கள்:
பன்னூலாசிரியர் மவ்லவீ சொல்லருவி மு. முஹம்மது அபூதாஹிர்
பாகவீ
பேராசிரியர், நூருல் இஸ்லாம் அரபிக்கல்லூரி, சேலம்
பேராசிரியர், நூருல் இஸ்லாம் அரபிக்கல்லூரி, சேலம்
பன்னூலாசிரியர் பேராசிரியர் ஒய். முஹம்மது ரஃபீக் எம்சிஏ, எம்பிஏ.,
உதவிப் பேராசிரியர், ஆலிம் முஹம்மது ஸாலிஹ் பொறியியல் கல்லூரி, சென்னை
உதவிப் பேராசிரியர், ஆலிம் முஹம்மது ஸாலிஹ் பொறியியல் கல்லூரி, சென்னை
இரண்டு இடங்கள் - மூன்று நாட்கள் - நான்கு நிகழ்ச்சிகள்
பெண்களுக்கு தனியிட வசதி - விசாலாமான வாகன நிறுத்துமிடம் -
இரவு உணவு ஏற்பாடு
அனைவரும் குடும்பத்துடன் வருக! அன்பர்களையும் அழைத்து வருக!!
அளவிலா அறிவமுதம் (பெ)பருக!!!
அழைப்பில் இன்புறும்...
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
+965 9787 2482
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
+965 9787 2482
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Sunday, September 10, 2017
ராமநாதபுர மாவட்டத்தில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு!!
பரமக்குடியில் திங்கட்கிழமை இமானுவேல் சேகரன் நினைவு
தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட
ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த உள்ளனர்.
இதையொட்டி மாவட்டத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுஉள்ளன.
ஐ.ஜி.க்கள் சைலேஷ்குமார் யாதவ், சண்முகராஜேஸ்வரன், டேவிட்சன்
தேவாசீர்வாதம்,
டி.ஐ.ஜி.க்கள் கார்த்திகேயன், கபில்குமார்சரட்கர், பாலகிருஷ்ணன், பிரதீப்குமார், தீபக்தாமோர், 16 போலீஸ் சூப்பிரண்டுகள்,
14 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 26 உதவி போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகளும்
பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இவர்களின் மேற்பார்வையில் ஆயுதப்படை, பட்டாலியனை
சேர்ந்த 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதுதவிர, ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றி
வரும் ஆயிரத்து 700
போலீசாரும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்த
விழாவிற்காக ஒட்டுமொத்தமாக 4 ஆயிரத்து 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் அனைவரும் அந்தந்த
பகுதியில் இருந்து வந்து அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தங்களின் உயர் அதிகாரி
முன்னிலையில் ஆஜராகி பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுஉள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே பணியாற்றிய மயில்வாகனன், சிபிசக்கரவர்த்தி, சரவணன்
உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
பாதுகாப்பு பணிக்காக கலவர தடுப்பு வாகனங்கள் முக்கிய இடங்களில் நிறுத்தி
வைக்கப்பட்டிருக்கும். மேலும், மோப்ப நாய்கள், வெடிகுண்டுகளை
கண்டுபிடித்து செயலிழக்க செய்யும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்த
ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள சோதனைச் சாவடிகளில் அனைத்து
வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும்.
இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு
ஓம்பிரகாஷ்மீனா தெரிவித்தார்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Saturday, September 9, 2017
ராமநாதபுரத்தில் ஏர் கண்டிஷனர் மற்றும் ஃபிரிட்ஜ் பழுது நீக்குதல் இலவச பயிற்சி!!
இராமநாதபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின்
கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் செப் 11ம் தேதி முதல், ஏர்
கண்டிஷனர் மற்றும் ஃபிரிட்ஜ் பழுது நீக்குதல் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது.
பயிற்சி பெற விரும்புவோர், 18 வயதிலிருந்து, 35 வயதுக்கு குறைவாகவும், குறைந்தபட்சம், 8ம் வகுப்பு படித்தவராகவும் இருக்க வேண்டும். ராமநாதபுர
மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், சுய
தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
30 நாள்கள் தொடர்ந்து
நடைபெறும் பயிற்சியானது காலை, 10 மணி முதல், மாலை, 5.30
மணி வரை நடைபெறும். பயிற்சி காலத்தில் மதிய
உணவு இலவசமாக வழங்குவதோடு, பயிற்சி முடித்தவுடன்
தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி
மைய இயக்குனரிடம் பெயர், வயது, விலாசம், கல்வித்தகுதி
ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.
ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளி மாற்றுச்சான்றிதழ் ஆகியவற்றின் நகல், 4 பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, 04567-221612
மற்றும் 9994151700 என்ற ஃபோன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
செய்தி: திரு. தாஹீர், கீழை
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
போராட்டத்தில் ஈடுபட்ட ராமநாதபுரம் கல்லூரி மாணவர்கள் கைது!!
நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும்
கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இந்த
கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக கல்லூரி மாணவர்கள்
மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை கல்லூரி மாணவ–மாணவிகள்
ஏராளமானோர் கல்லூரியில் இருந்து ஊர்வலமாக நடந்து சென்று தலைமை தபால் அலுவலகத்தில்
முற்றுகையிட சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று கல்லூரி மாணவ–மாணவிகளை
அச்சுந்தன்வயல் அருகே தடுத்து சமரசம் செய்தனர்.
அப்போது மாணவர்கள் ஊர்வலமாக சென்று முற்றுகையிட போவதாக
தெரிவித்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் மாணவ–மாணவிகள்
அந்த இடத்திலேயே அமர்ந்து திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை
தொடர்ந்து போலீசார் 137
மாணவிகள் உள்பட 258 பேரை கைது செய்தனர்.
செய்தி:
தினத்தந்தி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Thursday, September 7, 2017
புளுவேல் விளையாட்டை அலைபேசியில் பிறருக்கு பகிர்ந்தால் கடும் நடவடிக்கை!!
புளுவேல் விளையாட்டை அலைபேசியில் பிறருக்கு பகிர்ந்தால்
கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என கலெக்டர் நடராஜன் எச்சரித்தார்.
புளுவேல் விளையாட்டு குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம், ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் நடராஜன் பேசியதாவது:
இணையதளம் மற்றும் நவீன அலைபேசிகள் மூலம் பரவி வரும் புளுவேல் என்ற கணினி விளையாட்டு, 13 முதல் 25 வயதுள்ள வளர் இளம் பருவத்தினரை பாதிப்படைய செய்கிறது.
உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. பள்ளி, கல்லுாரிகளில்
மாணவர்களின் இணையதள பயன்பாட்டை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.
தங்கள் குழந்தைகள் அதிக நேரம் இணைய தள விளையாட்டில் ஈடுபடுகின்றனரா, இரவில் அதிக நேரம் தனி அறையில் அல்லது மொட்டை மாடியில் இணைய தளத்தில் விளையாடுகின்றனரா, என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.
நமது பாரம்பரிய விளையாட்டுகளை குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும். யாரிடமும் பேசாமல் தனியாக இருந்தாலோ, நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தாலோ கவனித்து சரி செய்ய வேண்டும்.
குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிடவும், மனம் விட்டு பேசவும் வேண்டும். இரவு நேரங்களில் கண்விழிக்க வைக்க கூடாது. புளுவேல் விளையாட்டில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர், ஆசிரியர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதனை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
செப்டம்பர் மாதம் ராமநாதபுரம் மாவட்டத்தில் இலவச கண்சிகிச்சை முகாம்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் இலவச கண்சிகிச்சை முகாம் நடக்கும்
இடங்கள்:
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில்,
செப்.,9ல் பரமக்குடி ஆயிர வைசிய
தொடக்கப்பள்ளியிலும்,
செப்.,10ல் கிருஷ்ணன்கோவில் சங்கரா கண்
மருத்துவமனை சார்பில் கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியிலும்,
செப்.,15ல் நிலக்கோட்டை தமியான் கண் மருத்துவமனை
சார்பில் சின்ன கீரமங்கலம் ஆர்.சி.சர்ச் வளாகத்தில் நடக்கிறது.
செப்.,16ல் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் பரமக்குடி ஆயிர வைசிய கல்யாண மஹாலிலும்,
செப்.,19ல் மதுரை மீனாட்சி மிஷன் கண் மருத்துவமனை
சார்பில் மண்டபம் பேரூராட்சி கல்யாண மஹாலிலும் நடப்பதாக கலெக்டர் நடராஜன்
தெரிவித்துள்ளார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)