(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, August 20, 2017

ராமநாதபுரம் நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த கோரிக்கை!!

No comments :
ராமநாதபுரம் நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக செயல்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


ராமநாதபுரம் நகரில் பல இடங்களில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியதால் சுகாதார சீர்கேடு இருந்து வந்தது. இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மக்களின் நீண்டகால வேண்டுகோளை ஏற்று அரசு பாதாள சாக்கடை திட்டத்தை அறிவித்தது. 



தற்போது இத்திட்டம் மூலம் வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்டவைகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு குடியிருப்புகளுக்கு முழுமையாக இணைப்பு அளிக்கப்படவில்லை. 

இதனால் பல தெருக்களில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. கால்வாய்களில் இருந்து கழிவுநீர் வெளியேற முடியாமல் அடைபட்டு துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அதிகாரிகள் நகரில் கழிவுநீர் சேராமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும், இணைப்பு இல்லாத தெருக்களில் முழுமையாக இணைப்பு ஏற்படுத்தவும் ஆவண செய்ய வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். 

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment