Saturday, August 12, 2017
கல்லூரியில் விடுதி வசதி ஏற்படுத்த வலியுறுத்தி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு!!
ராமநாதபுரம் சேதுபதி அரசு கலை கல்லூரியில் விடுதி வசதி
ஏற்படுத்த வலியுறுத்தி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி
வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் சேதுபதி அரசு கலை கல்லூரி உள்ளது.
சுற்றுப்புற கிராம பகுதிகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்
இளங்கலை, முதுகலை படிப்புகளை பெற்று வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட வெளியூர்
மாணவர்கள் பலர் படித்து வரும் நிலையில் அவர்களுக்கு வசதியாக கல்லூரி அருகில்
விடுதி வசதி ஏற்படுத்தி தர கடந்த பல வருடங்களாக மாணவர்கள் வலியுறுத்தி
வருகின்றனர்.
இதுநாள்வரை கல்லூரி நிர்வாகம் ஏற்படுத்தி தரவில்லை. இதேபோல்
கடந்த 2 வருடங்களாக பட்டமளிப்பு விழாவும் நடத்தவில்லை.
விரைவில் விடுதி வசதி ஏற்படுத்தவும், பட்டமளிப்பு விழாவும் நடத்தவும் வலியுறுத்தி நேற்று மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர்.
விரைவில் விடுதி வசதி ஏற்படுத்தவும், பட்டமளிப்பு விழாவும் நடத்தவும் வலியுறுத்தி நேற்று மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர்.
இதையடுத்து கல்லூரியில் பதட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து
அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment