முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, August 29, 2017

குடிநீர் விநியோகக் குழாய்களைச் சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்!!

No comments :
காவிரி  குடிநீர் விநியோகக் குழாய்களைச் சேதப்படுத்துவோர், குடிநீரை முறைகேடாகப்  பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும என கலெக்டர் நடராஜன்  தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரது அறிக்கை:

ராமநாதபுரம்  மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களின் நிலத்தடி நீர், குடிநீருக்குப்  பயன்படுத்த இயலாத அளவிற்கு உப்புத்தன்மையதாக உள்ளது.  இதனால் திருச்சி  காவிரி ஆற்றுப்படுகையிலிருந்து குடிநீரை குழாய்கள் மூலம் எடுத்து வந்து  கிராமங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வடகிழக்குப் பருவமழை  பெய்யாமல் விட்ட காரணத்தாலும், காவிரி ஆற்றில் நீர்வரத்து இல்லாததாலும்  அனைத்துப் பகுதியிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. 

இதனால்  காவிரி ஆற்றுப்படுகையிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக  எடுக்கப்படும் நீரின் அளவும் குறைந்து வருகிறது. இந்த நிலை மேலும்  குறையாமல் இருப்பதற்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.


அதனை  ஈடுசெய்வதற்காக வாய்ப்புள்ள இடங்களில் புதிய குடிநீர் திட்டங்களை ஆரம்பிக்க  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், காவிரி  குடிநீர் விநியோகம் செய்வதற்காக நிலத்தடியில் பதிக்கப்பட்டுள்ள குழாய்களை  சில நபர்கள் சேதப்படுத்தி குடிநீரை வீணாக்கி வருகின்றனர்.

இதனால்  அதற்கடுத்து பயன்பெறக்கூடிய கிராமங்களுக்கு குடிநீர் சென்றடையாமல் தடை  ஏற்பட்டு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது.  இந்நிலை தொடர்ந்தால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது போலீசார் மூலம் மிக  கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும். 

குடிநீர் விநியோகத்தின் செயல்பாடுகளை  உன்னிப்பாக கவனித்து தொடர் நடவடிக்கை எடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்தில்  04567- 231375 மற்றும் 04567 -230431 என்ற தொலைபேசி இணைப்புகளுடன் தொடர்பு  கொள்ளக்கூடிய தகவல் மையம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. 


இதுதவிர அனைத்து  ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் தகவல் மையம் தொடங்கப்பட்டுள்ளது.  பொதுமக்கள் குடிநீர் தேவை மற்றும் குடிநீரை முறைகேடாக பயன்படுத்துவோர்  பற்றிய தகவல்களை அங்கு தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டம் முழுதும் செப்.6ம் தேதி வரை பாலின் தர பரிசோதனை முகாம்!!

No comments :
பாலின் தரம் குறித்து பரிசோதனை செய்ய ராமநாதபுரம்  நகராட்சி அலுவலகத்தில் இலவச சிறப்பு உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. செப்.6ம் தேதி வரை இந்த முகாம் நடைபெறுகிறது.

மாவட்ட  உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பில்  கலெக்டர் நடராஜன் தொடங்கிவைத்துப் பேசுகையில், “மாவட்டத்தில் உணவுப்  பாதுகாப்புத் துறையின் மூலம் பொதுமக்கள் உட்கொள்ளும் உணவுப் பொருள்களின்  தரம் குறித்து அவ்வப்போது அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு உறுதி  செய்யப்படுகிறது. தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும்  அத்யாவசியத் தேவையான பாலின் தரம் குறித்து பரிசோதனை செய்திட `இமேட்’ என்ற   இயந்திரம் மூலம் மாநிலத்திலேயே 2வதாக நமது மாவட்டத்தில்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



 இந்த இயந்திரமானது 100 சதவீதம் கணினிமய  தானியங்கி கருவி. இக்கருவியின் மூலம் பொதுமக்கள் தங்கள் வீடுகளில்  பயன்படுத்தும் பாலின் தரத்தையும், கலப்படம் ஏதும் உள்ளதா என்பதையும் மிக  துல்லியமாக அறிந்து கொள்ள இயலும். பால் உணவு மாதிரிகள் பகுதி வாரியாக  சேகரிக்கப்பட்டு உணவு பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் உடனடியாக  தெரிவிக்கப்படுகிறது. இச்சிறப்பு முகாம் வரும் 6ம் தேதி வரை (விடுமுறை  நாட்கள் தவிர) மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்திட  திட்டமிடப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் இம்முகாம்களில் கலந்துகொண்டு தாங்கள்  பயன்படுத்தும் பாலின் தரம் மற்றும் தன்மைகள் குறித்து விழிப்புணர்வு பெற்று  பயனடையலாம். இவ்வாறு அவர் பேசினார்.

இதே போல் இன்று (ஆக.,29) கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நடக்கும் முகாமில் ஒன்றிய பகுதிகளிலும்,
ஆக., 30 ல் பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் நடக்கும் முகாமில் பரமக்குடி ஒன்றியம், போகலுார், நயினார்கோவில் ஒன்றிய பகுதியில் உள்ளவர்கள் பாலின் தரம் குறித்து சோதனை செய்து கொள்ளலாம்.

செப்., 1 ல் முதுகுளத்துார் பேரூராட்சி அலுவலகத்தில் நடக்கும் முகாமில், கமுதி, முதுகுளத்துார், கடலாடி, ஒன்றியத்தினை சேர்ந்தவர்களும்,

செப்., 4 ல், ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தில் நடக்கும் முகாமில் மண்டபம் ஒன்றியத்தினரும்,

செப்., 6 ல், ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் நடக்கும் முகாமில், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை ஒன்றியப்பகுதியில் வசிப்பவர்களும், பாலினை கொடுத்து இலவசமாக தரம் அறிந்து கொள்ளலாம்.


நிகழ்ச்சியில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஷ் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தகவல்: திரு. ஃபத்தாஹ், கீழை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, August 28, 2017

ராமநாதபுரம் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் நாய்கள் தொல்லை!!

No comments :

ராமநாதபுரம் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர்.

ராமநாதபுரத்தை சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட கிராம பகுதிகள் உள்ள நிலையில், மதுரை, ராமேஸ்வரம் உட்பட வெளியிடங்களுக்கு செல்வதற்கு ஏராளமான பயணிகள் தினந்தோறும் ராமநாதபுரம் வருகின்றனர். 

ரயில் நிலையத்திலும் பேருந்து நிலையத்திலும் பயணிகள் உட்காருவதற்கு போதுமான வசதிகள் இருந்தாலும் மேற்கூரைகள் குறைவான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளதால் திறந்தவெளியில் நிற்க வேண்டியுள்ளது. இருக்கின்ற சேர்களுக்கு அருகில் தெருநாய்கள் உறங்குகின்றன. இதனால் பயணிகள் அச்சத்துடன்  வரவேண்டியுள்ளது. 

இதுதவிர  பயணிகளுக்கு தேவையான கழிப்பறை, குடிநீர் வசதிகள் எதுவும் முறையாக செய்துதரப்படவில்லை. கழிவறைகள் கட்டப்பட்டும் தண்ணீர் வசதி இல்லாததால் அவைகள் பூட்டியே கிடக்கின்றன. இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரிவது கிடையாது.

இதனால் இரவில் வரும் பயணிகள் கடும் சிரமம் அடைந்து  வருகின்றனர். தெருநாய்கள் உள்ளே வருவதை தடை செய்தும், அடிப்படை வசதிகளை அதிகரிக்கவும் பயணிகள் பலர் வலியுறுத்தி உள்ளனர்.


செய்தி: திரு. தாஹீர், கீழை
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு திட்டத்தில் கீழ் ரூ. 10 லட்சம் வரை கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்!!

No comments :
அனைத்து பகுதி மக்களுக்கும் சுயவேலைவாய்ப்பை அளிக்கவும், வேலைவாய்ப்பினை அதிகரிக்கவும் அவர்களது பொருளாதாரம் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கிலும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கல்வித்தகுதி தேவையில்லை. வயது வரம்பு ஏதுமில்லை. வருமான உச்சவரம்பு இல்லை. உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்க அரசு மானியத்துடன் வங்களின் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது.

 இத்திட்டத்தில் உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்ச திட்டத்தொகையாக ரூ.25 லட்சமும்,
சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி தொடர்பான தொழில்களுக்கு திட்ட தொகை ரூ.10 லட்சத்திற்கும் மேலும் சேவை தொழில்களுக்கு திட்ட தொகை ரூ.5 லட்சத்திற்கு மேலும் இருப்பின் அத்தகைய திட்டங்களுக்கு கடனுதவி பெற விரும்புவர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 18 வயது நிரம்பியவர்கள் இதில் பயன் பெறலாம்.

தனிநபர் தொழில் முனைவோர்கள், உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள், சுய உதவி குழுக்கள், அறக்கட்டளைகள் ஆகியோர் இத்திட்டத்தில் பயன் பெறலாம். பொதுப்பிரிவினர் நகர்ப்புறத்தில் தொழில் துவக்கும்பட்சத்தில் அவர்களுக்கு திட்டகடன் தொகையில் 15 சதவிகிதம் மானியமும், ஊரகப் பகுதியில் தொழில் துவக்கும் பட்சத்தில் 25 சதவிகிதம் மானியமும் வழங்கப்படும்.

சிறப்புப்பிரிவினர்களான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் படைவீரர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நகர்ப்புறத்தில் தொழில் துவக்கும் பட்சத்தில் அவர்களுக்கு திட்டமதிப்பீட்டுத் தொகையில் 25 சதவிகிதம் மானியமும், ஊரகப் பகுதியில் தொழில் துவக்கும்பட்சத்தில் 35 சதவிகிதம் மானியமும் வழங்கப்படும்.

தொழில் துவங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசிஎண். 04567- 230497.


புதிதாக உற்பத்தி மற்றும் சேவை தொழில் ஆரம்பிக்க தக்க சான்றுகளுடன் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை தொடர்பு கொண்டு விபரங்களை பெற்று http://www.kviconline.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் எலக்ட்ரிசீயன் பயிற்றுநர் பணி வாய்ப்பு!!

No comments :
ராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பொது மற்றும் தனியார் கூட்டமைப்பில் செயல்படும் மின்சாரப்பணியாளர் தொழிற்பிரிவின் இளநிலை பயிற்சி அலுவலர் பணி தற்காலிகமாக பயிற்றுநர் நிலையில் ஒரு பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் பொதுப்பிரிவினர் முன்னுரிமையில் நிரப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது. 

இப்பணிக்கான கல்வித்தகுதி எலக்ட்ரிசீயன் தொழிற்பிரிவில் என்டிசிஎன்ஏசி அல்லது பட்டயப்படிப்பு இஇஇ படித்திருப்பதோடு குறைந்தபட்சம் வருடம் நன்கு பணியாற்றிய முன் அனுபவம் இருக்க வேண்டும். இப்பதவிக்கு விண்ணப்பிப்போர் ராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். இந்த பயிற்றுநர் பதவிக்கு மாதம் தொகுப்பூதியமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். 




இந்த பயிற்றுநர் பதவியானது முற்றிலும் தற்காலிகமானது. இதனைக் கொண்டு எவ்வித முன்னுரிமையும் கோர இயலாது. பயிற்றுநர் பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளோர் தங்களது சுய விபரங்களை பூர்த்தி செய்து செப்.15ம் தேதிக்குள்
முதல்வர்,
அரசு தொழிற்பயிற்சி நிலையம்,
ராமநாதபுரம்


என்ற முகவரிக்கு அனுப்பலாம் என கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Thursday, August 24, 2017

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடரும் குடிநீர் பிரச்னை!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடரும் குடிநீர் பிரச்னையால் பொதுமக்கள் ஒரு குடம் தண்ணீரை 10 ரூபாய் வரை கொடுத்து வாங்க வேண்டிய அவலத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, கீழக்கரை  நகராட்சிகளில் 3 நாள் முதல் 7 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. மண்டபம் பேரூராட்சியில் 5 நாள் முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வெளியிடங்களில் குடிநீரை குடம் ஒன்றுக்கு 10 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.  

அதுவும் மொத்தமாக டேங்கர் லாரியோடு வாங்கினால்தான்.  சில்லரையாக குடிநீர் கேட்டால் டேங்கர் ஓட்டுநர்கள் கொடுப்பது கிடையாது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் ஊரகப் பகுதிகள், சத்திரக்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள், உச்சிப்புளி பகுதிகளில் கடந்த பல மாதங்களாக கடுமையான குடிநீர் பிரச்னை நிலவுகிறது.


ராமநாதபுரத்தைச் சுற்றியுள்ள கருங்குளம், சித்தார்கோட்டை உள்ளிட்ட பல கிராமப் பகுதியில் தண்ணீர் வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதுகுறித்து புகார்கள் தெரிவித்தாலும் அதிகாரிகள் தற்போது வரை மாற்று நடவடிக்கை எடுக்கவில்லை.  

மாவட்டத்தில் மழைக்காலம் ஆரம்பிக்க இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில், தற்போதுள்ள குடிநீர் பிரச்னையைத் தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த சந்திரன் கூறுகையில்,  “நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் முறையாக குடிநீர் வருவது கிடையாது. பல மாதங்களாக  குடிநீர் இல்லாமல் சிரமம் அடைந்து வருகிறோம். குடிநீர் தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் பயனில்லை.  

குடிநீர் கிடைக்காமல் சாலையோரத்தில் தேங்கும் நீரை குடித்து வருகிறோம்.  குடிநீர் கலங்களாகவும், அசுத்தமாகவும் உள்ளதால் தொற்றும்நோய் பரவி வருகிறது. இதனால் வயதானவர்களும், குழந்தைகளும் பாதிப்படைகின்றனர். வேறு வழியில்லாமல் சில இடங்களில் நாங்களே குழாயை உடைத்து தண்ணீரை எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.  முறையாக அனைத்து இடங்களிலும் குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பிரச்னைகள் வராதுஎன்றார்.

குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “பல இடங்களில் டேங்கை திறந்து பொதுமக்களே குடிநீர் எடுத்து வருகின்றனர்.  டேங்கின் அருகிலேயே குளிக்கவும் செய்வதால் தொற்றுநோய் பரவும் நிலை ஏற்படுகிறது.  இதைத் தவிர்க்க பொதுமக்கள் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது. கிராமப் பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் குடிநீர் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும்என்றார்.


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, August 20, 2017

ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் ஏடிஎம் சென்டர், கனவு நினைவேறுமா?!!

No comments :
ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக ஏடிஎம் சென்டர் அமைக்க வேண்டும் என பொதுநல அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


ராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரம் வழியாக சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு இருமார்க்கமாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அனைத்து ரயில்களும் மாவட்டத்தின் தலைநகரான ராமநாதபுரத்தில் நின்று செல்கிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் மிகவும் குறைவாக உள்ளது. 

ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் பிளாட்பாரத்தின் கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் 2வது பிளாட்பாரத்திற்கு செல்லும் பயணிகள் வெகுதூரம் தங்கள் சுமந்து வரும் சுமைகளுடன் மேம்பாலத்தில் ஏறி அடுத்த பிளாட்பாரம் செல்ல வேண்டியுள்ளது. பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில் ரயில் நிலையத்தின் மையப்பகுதியில் புதிய நடைமேம்பாலம் அமைக்க வேண்டும். 

இதுதவிர சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இந்த ரயில் நிலையத்தில் பிற நகரங்களில் உள்ளது போல வங்கி ஏடிஎம் மையம் வசதி அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுநல அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த கோரிக்கை!!

No comments :
ராமநாதபுரம் நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக செயல்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


ராமநாதபுரம் நகரில் பல இடங்களில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியதால் சுகாதார சீர்கேடு இருந்து வந்தது. இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மக்களின் நீண்டகால வேண்டுகோளை ஏற்று அரசு பாதாள சாக்கடை திட்டத்தை அறிவித்தது. 



தற்போது இத்திட்டம் மூலம் வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்டவைகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு குடியிருப்புகளுக்கு முழுமையாக இணைப்பு அளிக்கப்படவில்லை. 

இதனால் பல தெருக்களில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. கால்வாய்களில் இருந்து கழிவுநீர் வெளியேற முடியாமல் அடைபட்டு துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அதிகாரிகள் நகரில் கழிவுநீர் சேராமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும், இணைப்பு இல்லாத தெருக்களில் முழுமையாக இணைப்பு ஏற்படுத்தவும் ஆவண செய்ய வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். 

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Thursday, August 17, 2017

ஏர்வாடி தர்ஹாவில் சிறப்பாக நடந்த 843–ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ளது முஸ்லிம்களின் புண்ணியதலமான ஏர்வாடி தர்கா. இங்கு மகான் குத்பு சுல்தான் செய்யது இப்ராகிம் ‌ஷகீது ஒலியுல்லா அடக்கமாகி உள்ளார். இந்த மகானின் சமாதியில் புனித சந்தனம் பூசும் உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி 843–ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா நேற்று அதிகாலை கோலாகலமாக நடைபெற்றது.

விழாவையொட்டி முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர்கள் கொண்டு வந்த தண்ணீரால் தர்கா முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. சந்தனக்கூட்டின் அடித்தளத்தினை ஆசாரி சமூகத்தினர் செய்து கொடுத்தனர். அடிக்கூடு, நடுக்கூடு, மேல்கூடு ஆகியவற்றை யாதவர்களும், ஆதிதிராவிடர்களும் அலங்கரித்தனர்.

அதைத்தொடர்ந்து தீப்பந்தங்களுக்காக சலவை தொழிலாளர்கள் கொண்டு வந்த துணிகளில் ஆதிதிராவிடர்கள் வழங்கிய நேர்ச்சை எண்ணையை ஊற்றி சந்தனக்கூடுக்கு வழிகாட்டியாக தீப்பந்தம் கொண்டுவரப்பட்டது.



இவ்வாறு அழகுபடுத்தப்பட்ட சந்தனக்கூடு நேற்று முன்தினம் இரவு ஏர்வாடி தர்கா ஹக்தார்கள் குடியிருக்கும் தைக்கா பகுதியில் இருந்து யானை, குதிரைகளில் இளம்பச்சை கொடிகள் ஏந்தி வர தர்காவை நோக்கி புறப்பட்டது.

ஊர்வலத்தில் மேளதாளம் முழங்க, இரவை பகலாக்கும் வண்ண ஒளியில் சந்தனக்கூடு அழகுற வந்தது. மதநல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டாக திகழ்ந்த சந்தனக்கூடு பல்லாயிரக்கணக்கான அனைத்து மத பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து தர்காவை வந்தடைந்தது.

அதனை தொடர்ந்து வெள்ளிப்பேழையில் வைத்து எடுத்து வரப்பட்ட புனித சந்தனம் மகானின் சமாதியில் பூசப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோர்ட்டு மூலம் நியமிக்கப்பட்டுள்ள ஆணையாளர் தேவதாஸ், ஆணைய உதவியாளர் தமிழரசு ஆகியோர் செய்திருந்தனர். விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

விழாவையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் விடப்பட்டிருந்தன.

செய்தி: தினத்தந்தி



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Wednesday, August 16, 2017

ராமநாதபுர மாவட்டத்தில் சுதந்திர தினவிழா, சிறப்பான கொண்டாட்டம்!!

No comments :
ராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. கலெக்டர் நடராஜன் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.


விழாவில்சுதந்திரப் போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து கலெக்டர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 32 காவல்துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறைகளை சார்ந்த 80 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.


மாவட்ட திட்ட இயக்குனர் தளபதிவருவாய் கோட்டாட்சியர் பேபிஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரைமாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் போஸ்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமிவட்டார போக்குவரத்து அலுவலர் செல்வகுமார்மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சகாய ஸ்டீபன் ராஜ்துணை இயக்குனர்கள் குமரகுருபரன்மீனாட்சிபொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் குருதிவேல்மாறன்மாவட்ட வேளாண் அலுவலர் அம்பேத்குமார் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.





மேலும், பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் மொத்தம் 223 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 14 லட்சத்து 85 ஆயிரத்து 647 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

ராமநாதபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் மாவட்ட நீதிபதி கயல்விழி தேசியகொடி ஏற்றி வைத்தார். இதில், தலைமை குற்றவியல் நீதிபதி அனில்குமார், மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஸ்குமார், சப்-கோர்ட்டு நீதிபதி பிரீத்தா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சொர்ணகுமார், வக்கீல் சங்க தலைவர் அழகுபாலகிருஷ்ணன், செயலாளர் சலீம், துணை தலைவர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் வருமானத்துறை அலுவலகத்தில் மாவட்ட வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் கொடி ஏற்றினார். வருமான வரித்துறை அலுவலர் காளிதாஸ் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் முதல்வர் மாரிமுத்து முன்னிலையில் தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தேசியகொடி ஏற்றி வைத்தார். ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஹாஜாமுகைதீன், உதவி தலைமை ஆசிரியர் ஜாகிர்உசேன் ஆகியோர் முன்னிலையில் தாளாளர் டாக்டர் பாபு அப்துல்லா தேசியகொடி ஏற்றி வைத்தார். செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதல்வர் நாகலட்சுமி முன்னிலையில் தாளாளர் ராஜாத்தி அப்துல்லா தேசியகொடி ஏற்றி வைத்தார்.

செய்யது அம்மாள் கலை அறிவியில் கல்லூரியில் முதல்வர் அமானுல்லா ஹமீது முன்னிலையில் பொருளாளர் செல்லத்துரை அப்துல்லா தேசியகொடி ஏற்றி வைத்தார். ராமநாதபுரம் வேலு மாணிக்கம் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் தாளாளர் வேலுமனோகரன் தேசிய கொடி ஏற்றிவைத்தார். அறக்கட்டளை உறுப்பினர்கள் ஜெகநாதன், கதிரேசன், பள்ளி முதல்வர் பரிமளா அந்தோனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூயில் கல்லூரி டீன் முகமது ஜகாபர் தேசியகொடி ஏற்றி வைத்தார். முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வர் அலாவுதீன் தேசியகொடி ஏற்றி வைத்தார். கீழக்கரை செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லூரியில் முதல்வர் ரஜபுதீன்சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் கீழக்கரை நகரசபை ஆணையாளர் வசந்தி தேசியகொடி ஏற்றி வைத்தார். கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் முதல்வர் சுமையாதாவூது முன்னிலையில் செயலாளர் ஹாலித்புகாரி தேசியகொடி ஏற்றினார்.




கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் தாளாளர் முகைதீன் இப்ராகிம் தேசியகொடி ஏற்றினார். செயலாளர் ஜமால் இப்ராகிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ் கலந்து கொண்டனர். கீழக்கரை கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளி, தீனியா மெட்ரிக் பள்ளி, அல் பைனா மெட்ரிக் பள்ளி, முகைதீனியா பள்ளி, மக்தூமியா பள்ளி, கண்ணாடி வாப்பா மெட்ரிக் பள்ளி, சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப்பள்ளி, பேர்ல் மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Saturday, August 12, 2017

ராமநாதபுரம் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கடனுதவி!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் கடனுதவி பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் நடராஜன் தகவல் தெரிவித்தார்.

மாவட்ட தொழில் மையங்களின் மூலம் செயல்படுத்தப்படும் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் நேரடியாக விண்ணப்பம் செய்வதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டும், எளிதாக விண்ணப்பிக்கும் வகையிலும், ஒவ்வொரு கட்டத்திலும் விண்ணப்பத்தின் நிலையை அறியும்படியாகவும் கடந்த 1ம் தேதி முதல் இணையதளம் மூலம் கடன் வசதி பெறும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் கடன் பெற விரும்புவோர்  www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச கல்வித்தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் 18 வயதிற்கு மேல் 35 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும், சிறப்பு பிரிவினர் 45 வயது வரை இருக்கலாம். 

திட்ட முதலீட்டில் மானியம் 25 சதவீதம் விழுக்காடு, அதிகபட்ச மானியம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம். குடும்ப ஆண்டுவருமானம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்திற்குள் இருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2017- 18ம் ஆண்டிற்கு மானியமாக ரூ.36.67 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இதுவரையிலும் இத்திட்டத்தின் கீழ் குறைவான விண்ணப்பங்களே பெறப்பட்டுள்ளதாலும், ஏராளமான இளம் தொழில் முனைவோர் மானியத்துடன் தொழில் கடன் பெற வாய்ப்புள்ளதாலும் இந்த வாய்ப்பை இளைஞர்கள் அதிகளவில் பயன்படுத்தி தொழிற்கடன் பெறுவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.மேலும் விவரங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட தொழில் மையம் பொது மேலாளரை நேரில் தொடர்பு கொள்ளலாம் (அலுவலக தொலைபேசி எண்: 04567 230497) என கலெக்டர் தெரிவித்தார். 

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

கல்லூரியில் விடுதி வசதி ஏற்படுத்த வலியுறுத்தி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு!!

No comments :
ராமநாதபுரம் சேதுபதி அரசு கலை கல்லூரியில் விடுதி வசதி ஏற்படுத்த வலியுறுத்தி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரத்தில் சேதுபதி அரசு கலை கல்லூரி உள்ளது. சுற்றுப்புற கிராம பகுதிகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இளங்கலை, முதுகலை படிப்புகளை பெற்று வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட வெளியூர் மாணவர்கள் பலர் படித்து வரும் நிலையில் அவர்களுக்கு வசதியாக கல்லூரி அருகில் விடுதி வசதி ஏற்படுத்தி தர கடந்த பல வருடங்களாக மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.



இதுநாள்வரை கல்லூரி நிர்வாகம் ஏற்படுத்தி தரவில்லை. இதேபோல் கடந்த 2 வருடங்களாக பட்டமளிப்பு விழாவும் நடத்தவில்லை. 

விரைவில் விடுதி வசதி ஏற்படுத்தவும், பட்டமளிப்பு விழாவும் நடத்தவும் வலியுறுத்தி நேற்று மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர். 


இதையடுத்து கல்லூரியில் பதட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Thursday, August 10, 2017

கீழக்கரையில் 12-8-2017 அன்று இலவச கண் பரிசோதனை முகாம்!!

No comments :


கீழக்கரையில் 12-8-2017 அன்று அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம். அனைவரும் கலந்து பயண்பெற அழைக்கப்படுகிறார்கள்.



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுர மாவட்டத்தில் விஸ்வரூபமெடுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இருப்பினும் தற்போது பல நகராட்சி, ஊராட்சிகளில் முறையாக குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் பல இடங்களில் பொதுமக்களே குடிநீர் டேங்கை திறந்து குடிக்க நீர் எடுத்து வருகின்றனர்.

ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, கீழக்கரை நகராட்சிகளில் 3 நாள் முதல் 7 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. மண்டபம் பேரூராட்சியில் 5 நாள் முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியிடங்களில் குடிநீரை குடம் ஒன்றுக்கு ரூ.10 வரை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.



மாவட்டத்தில் ராமநாதபுரம் ஊரக பகுதிகள், சத்திரக்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள், உச்சிப்புளி பகுதிகளில் கடந்த பல மாதங்களாக குடிநீர் பிரச்னை உள்ளது. ராமநாதபுரத்தை சுற்றியுள்ள கருங்குளம், சித்தார்கோட்டை உள்ளிட்ட பல கிராம பகுதியில் தண்ணீர் வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதுகுறித்து புகார்கள் தெரிவித்தாலும் அதிகாரிகள் தற்போது வரை மாற்று நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்டத்தில் மழைக்காலம் ஆரம்பிக்க இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில் தற்போதுள்ள குடிநீர் பிரச்னையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.


சாலையோரங்களில் அடிக்கடி ஒரு சிலர் தங்கள் சுய லாபத்திற்காக காவிரி குடிநீர் குழாய்களை உடைத்து அருகில் உள்ள வயல், ஊரணிகளுக்கு தண்ணீரை கொண்டு செல்கின்றனர். ஒரு சிலர் டேங்கின் அருகிலேயே குளிப்பது, துணிகளை துவைப்பது போன்ற அநாகரீக செயல்களை செய்கின்றனர். இதனால் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னை விசுவரூபம் எடுத்து வருகிறது.


கிராம பகுதிகளுக்கு ராட்சத சிமென்ட் குழாய்கள் மூலம் காவிரி கூட்டு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. குடிநீர் சீராக சப்ளை செய்ய கிராம பகுதியில் குடிநீர் டேங்குகள் அமைக்கப்பட்டு அதில் வால்வுகள் பொருத்தப்பட்டுள்ளன. குழாய்களில் குடிநீர் வரும்போது பல இடங்களில் வால்வுகள், குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டு தண்ணீர் வீணாக்கப்படுகிறது. மாவட்டத்தில் மண்டபம், வழுதூர், பார்த்திபனூர், முதுகுளத்தூர், பரமக்குடி, நயினார்கோவில், கொடிகுளம் ஆகிய இடங்களில் குடிநீர் தொட்டிகளில் நீர் நிறைந்து வீணாவது வழக்கமாக உள்ளது. 

விழிக்க வேண்டும் அதிகாரிகள், ஒத்துழைக வேண்டும் பொதுமக்கள்!
தண்ணீரை வீண் விரயம் செய்யாமல் சேமிப்போம்!!


செய்தி: திரு. தாஹீர், கீழக்கரை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)