Monday, July 31, 2017
கீழக்கரையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை!!
கீழக்கரை மக்துாமியா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் உலக
நன்மைக்காகவும்,
மழைபெய்ய வேண்டியும் சிறப்பு தொழுகை நடந்தது.
நேற்று காலை 9:00 முதல் 10:00 மணிவரை ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்று, 'துஆ’ (பிராத்தனை) செய்தனர்.
பழைய குத்பா பள்ளிவாசல் இமாம் சுபைர் அகமது ரஹ்மானி, கல்லுாரி
பேராசிரியர் அகமது உசேன்,
மார்க்க சொற்பொழிவாளர் முகம்மது மன்சூர் அலி ஆகியோர் பயான்
சொற்பொழிவு நடத்தினர்.
பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை
அனைத்து முஸ்லிம் ஜமாத் மற்றும் சமூக நல அமைப்பினர் செய்திருந்தனர்.
செய்தி: திரு. தாஹிர், கீழக்கரை
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment