Sunday, July 30, 2017
ராமநாதபுரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை, ஒருவர் கைது!!
ராமநாதபுரம் பஜார் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட
புகையிலை பொருட்கள் மொத்தமாக விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு
ஓம்பிரகாஷ்மீனாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவருடைய
உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு காந்திமதிநாதன் தலைமையில் பஜார் போலீஸ்
இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் உள்ளிட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது கரிக்கடை சந்து பகுதியில் உள்ள ஒரு கடையில் ஏராளமான
அளவில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனை
தொடர்ந்து 17
கிலோ புகையிலை பொருட்களையும், 9 கிலோ
வாசனை புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக எக்ககுடியை சேர்ந்த தற்போது ராமநாதபுரம்
பாரதிநகரில் வசித்து வரும் வியாபாரி ஆசாத்கான்(வயது34) என்பவரை
போலீசார் கைது செய்தனர். இவர் தனது கடையில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு
பகுதிகளில் உள்ள கடைகளுக்கும் புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்தது
விசாரணையில் தெரியவந்துள்ளது.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment