Monday, July 3, 2017
கீழக்கரை பெண்ணிடம் ரூ.42 ஆயிரம் வழிப்பறி!!
கீழக்கரை வடக்குத்தெருவை சேர்ந்தவர் பத்மாவதி, 50. இவர் தனியார் நிதி நிறுவனத்தில் தன்னுடைய அடகு நகைகளை திருப்புவதற்கான தொகை
ரூ.42 ஆயிரத்துடன் நேற்று முன்தினம் பகலில் மணல்மேடு தெருவில் நடந்து வந்துள்ளார்.
அப்போது பைக்கில் வந்த 2 இளைஞர்கள் இவரது மீது
மோதியதில் நிலைகுலைந்து பத்மாவதி கீழே விழுந்துள்ளார். அவரது பணத்தை பறித்துவிட்டு
தப்பினர். இதுகுறித்து கீழக்கரை எஸ்.ஐ., வசந்தகுமார் விசாரிக்கிறார்.
செய்தி: தினமலர்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment