(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, June 18, 2017

டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!!

No comments :


ராமேசுவரம் அருகே உள்ள செமம்மடம் பகுதியில் ரெயில்வே கேட் அருகே புதிதாக டாஸ்மாக் கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முயற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது. செம்மமடம் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து செம்மமடம், மெய்யம்புளி, ஆத்திக்காடு, ஒண்டிவீரன்நகர், சத்யாநகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

இந்நிலையில் செம்மமடம் பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மீண்டும் செம்மமடம், சத்யாநகர், ஒண்டிவீரன்நகர்ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொது மக்களும் மற்றும் அனைத்து கட்சியினரும் இணைந்து தாலுகா அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். பிறகு அங்கு அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


ஆர்ப்பாட்டம் முடிந்த பின் தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தார் அப்துல்ஜபார் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதில் நகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பிரபு, சப்இன்ஸ்பெக்டர் லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது கூட்டத்தில் அனைத்து கட்சியினர் செம்மமடம் மட்டுமல்ல ராமேசுவரம் பகுதியில் எந்த இடத்திலும் டாஸ்மாக் கடைகள் அமைக்கக் கூடாது என்று முறையிட்டனர். அப்போது துணை தாசில்தார் செம்மமடம் பகுதியில் கண்டிப்பாக டாஸ்மாக் கடைகள் அமைக்கப்படாது என தெரிவித்தததை தொடர்ந்து அவர்கள் சமரசம் அடைந்து கலைந்து சென்றனர்.

நன்றி: தினத்தந்தி



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment