Thursday, June 29, 2017
பி.இ., நேரடி 2ம் ஆண்டு சேர்க்கைக்கு வரும் 30ம் தேதி கவுன்சலிங்!!
தமிழகத்தில் உள்ள 532
பொறியியல் கல்லூரிகளில் பி.இ., நேரடி
2ம் ஆண்டு சேர்க்கைக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
இதன்படி 94 ஆயிரத்து 518 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில்
சிவில் 15,967,
எலெக்ட்ரிக்கல் 52,942,
மெக்கானிக்கல் 23,703,
கெமிக்கல் 1,661,
டெக்ஸ்டைல் 233,
லெதர் 6,
பிரிண்டிங் 6
இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் பிஎஸ்சிக்கு 900 இடங்கள்.
இதற்கான விண்ணப்பங்கள் கடந்த மே 17ம்
தேதி ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டு 19ம் தேதியுடன் முடிவடைந்தது.
கவுன்சலிங் வரும் 30ம் தேதி துவங்கி ஜூலை 10ம் தேதி வரை காரைக்குடி அழகப்பசெட்டியார் அரசு பொறியியல் கல்லூரியில்
நடக்கவுள்ளது. கடந்த ஆண்டு 12,427 பேர் சேர்ந்தனர்.
நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான கவுன்சலிங் வரும் 30ம் தேதி முதல் அடுத்த மாதம் 10ம் தேதிவரை நடக்கவுள்ளது.
நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான கவுன்சலிங் வரும் 30ம் தேதி முதல் அடுத்த மாதம் 10ம் தேதிவரை நடக்கவுள்ளது.
30ம் தேதி காலை 9.30 மணிக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விளையாட்டு வீரர்கள், முன்னாள்
ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகளுக்கும், லெதர், பிரிண்டிங்
பிரிவுகளுக்கு நடைபெறும்.
1ம் தேதி காலை 8
மணி முதல் 9.30 வரை கெமிக்கல்
பிரிவுக்கு நடைபெறும். 9.30
முதல் 11 மணி வரை டெக்ஸ்டைல் பிரிவுக்கு
நடைபெறும். 1ம் தேதி மதியம் 1
மணி முதல் 3ம் தேதி மாலை 12.30 மணி வரை சிவில் குரூப்புக்கு நடைபெறும். 3ம் தேதி 3 மணி
முதல் 7ம் தேதி மதியம் 12.30
மணி வரை மெக்கானிக்கல் குரூப்புக்கு நடைபெறும். 7ம்
தேதி மதியம் 1.30
மணி முதல் 10ம் தேதி மாலை 3 மணி
வரை எலக்ட்ரிக்கல் குரூப்புக்கு நடைபெறும். 10ம் தேதி மாலை 3 மணி
முதல் 4 மணி வரை பி.எஸ்சி மாணவர்களுக்கு நடக்கவுள்ளது.
கவுன்சலிங்கிற்கு மாணவர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. கவுன்சலிங் நடக்கும் ஹாலுக்கு எதிரே கல்லூரிகளின் காலியிடங்களை தெரிந்துகெள்ளும் வகையில் பெரிய ஸ்கிரின் அமைக்கப்படும். மாணவர்கள் கட்ஆப் மார்க், என்று கவுன்சலிங், எத்தனை மணிக்கு அழைக்கப்படுவார்கள் உட்பட பல்வேறு விவரங்கள் கல்லூரியின் இணையதளம் www.accetlea.com -ல் வெளியிடப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Tuesday, June 27, 2017
கலெக்டர் நடராஜன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்!!
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர்
நடராஜன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட
வருவாய் அலுவலர் முத்துமாரி, வேளாண்மை துறை இணை இயக்குனர் அரிவாசன், கால்நடை
பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் மோகன், கலெக்டரின் நேர்முக
உதவியாளர் (வேளாண்மை) வெள்ளைச்சாமி, கூட்டுறவு சங்கங்களின்
இணைப்பதிவாளர் முருகேசன்,
நபார்டு திட்ட பொது மேலாளர் மதியழகன் ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் நடராஜன் கூறியதாவது:–
ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்மை துறை மற்றும் வேளாண்மை
சார்ந்த தோழமை துறைகளின் மூலம் பல்வேறு வேளாண் மேம்பாட்டு திட்டப்பணிகள்
செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2016–17–ம் நிதியாண்டில் பிரதமரின் புதிய பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நெல்
மற்றும் இதர வேளாண் பயிர்களுக்கு 1 லட்சத்து 17 ஆயிரத்து 542
விவசாயிகளுக்கு 1 லட்சத்து 12 ஆயிரத்து 981
எக்டேர் பரப்புக்கு பயிர் காப்பீடு செய்யப்பட்டு உள்ளது.
மிளகாய் போன்ற தோட்டக்கலை விவசாயிகளுக்கு 10,044 விவசாயிகளுக்கு 8,220 எக்டேர் பரப்பிற்கு பயிர் காப்பீடு செய்யப்பட்டு உள்ளது. 2016–17–ம் பயிர் காப்பீடு இழப்பீடு தொகையாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடன் பெற்ற
விவசாயிகளுக்கு ரூ.1
கோடியே 65 லட்சமும், கடன் பெறாத
விவசாயிகளுக்கு ரூ.353
கோடியே 63 லட்சமும் முதல் தவணையாக ஒதுக்கீடு
செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. விரைவில் இழப்பீட்டு தொகை வழங்குவதற்கான
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
வேளாண்மை பொறியியல் துறை மூலமாக நீடித்த நிலையான மானாவாரி
வேளாண்மை திட்டம் நடப்பு ஆண்டில் 5,000 எக்டேரில் முதல்
கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு தொகுப்புக்கு 1000 எக்டேர்
என்ற அடிப்படையில் 5
தொகுப்புகள் நடப்பு ஆண்டில் 5 வட்டாரங்களில்
செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மானாவாரி நிலங்களை மேம்படுத்தி
உற்பத்தியை நீடித்த நிலையான வகையில் பெருக்கி விவசாயிகளின் வருமானம் மற்றும்
வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டுஉள்ளது.
இதில் மொத்தம் 53 ஊருணிகள் தேர்வு
செய்யப்பட்டு இதுவரையில் 20
ஊருணிகளில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுதவிர குடிமராமத்து திட்டப்பணிகள் குண்டாறு
வடிநிலக்கோட்டத்தில் 14
கண்மாய்களில் முடிவு பெற்றுள்ளன. திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம்
வட்டாரங்களில் 5
கண்மாய்களில் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில்
பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே விவசாயத்தையும், விவசாயிகளின்
நலனையும் பாதுகாக்கிற வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து அனைத்து
நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்!!
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகை
கொண்டாடப்பட்டது. இதையொட்டி ராமநாதபுரத்தில் மதுரை ரோட்டில் உள்ள ஈதுகா
கோரித்தோப்பு மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
நகரில் உள்ள அனைத்து ஜமாத்தார்கள் சார்பில் நடைபெற்ற இந்த
சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் கலந்து
கொண்டனர். இதில் உலக நன்மைக்காகவும், மழைவேண்டியும், அமைதி
நிலவவும் வேண்டி சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. சிறப்பு தொழுகையின் முடிவில்
சிறியவர் முதல் பெரியவர் வரை ஒருவரையொருவர் கட்டித்தழுவி பெருநாள் வாழ்த்துக்களை
பரிமாறிக்கொண்டனர்.
ராமநாதபுரம் சின்னமுகல்லம் அம்பலகாரத்தெரு முஸ்லிம் ஜமாத்
சின்ன பள்ளிவாசலில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் பல்லாயிரக்கணக்கான
முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து திரளாக கலந்து கொண்டனர். தொழுகையின் முடிவில் உலக
அமைதிக்காக சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடத்தினர். இந்த தொழுகைக்கான ஏற்பாடுகளை
ராமநாதபுரம் பெரிய முகல்லம் மற்றும் சின்ன முகல்லம் பாசிப்பட்டறை ஜமாத் மற்றும்
காதர் பள்ளிவாசல் ஆகிய ஜமாத்களின் சார்பில் செய்திருந்தனர்.
நோன்பு பெருநாளை ஈகை திருநாளாக கொண்டாட வேண்டும் என
இஸ்லாமிய மார்க்கத்தில் அறிவுறுத்தப்பட்டுஉள்ளதால் ஏராளமான ஏழைகளுக்கு
தானதர்மங்களை முஸ்லிம்கள் வழங்கினர். சிறப்பு தொழுகைக்கு முன்னதாக பித்ரா
எனப்படும் ஏழை வரியை நலிந்தவர்களுக்கு வழங்கினர்.
இதேபோல, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மதரசா
மற்றும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் ஏராளமான பெண்கள் திரண்டு சிறப்பு
தொழுகையில் கலந்து கொண்டனர்.
இதேபோல கீழக்கரையில் உள்ள பெரிய குத்பா பள்ளிவாசல் உள்பட
அனைத்து தொழுகை பள்ளிவாசல்களிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில்
பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு தொழுகையின் முடிவில்
உலக அமைதிக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
இதேபோல, ஏர்வாடி, பெரியபட்டிணம், காஞ்சிரங்குடி
உள்பட அனைத்து பகுதிகளிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில்
ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தினர்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Wednesday, June 21, 2017
அரசு பாலிடெக்னிக்குகளில் விரிவுரையாளர் பணி வாய்ப்பு!!
அரசு பாலிடெக்னிக்குகளில் விரிவுரையாளர் பதவிக்கு
விண்ணப்பம் ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம் தகுதியும் விருப்பமுடையோர் வாய்ப்பை பயன்படுத்துங்கள்.
1058
காலிப்பணியிடங்கள் கொண்ட விரிவுரையாளர் பணி காலியாக உள்ளது
.
விரிவுரையாளர் சம்பளம் ரூபாய் 15000- 39100
கல்வி தர ஊதியம் ரூபாய் 5900 ஆகும்
.
விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் .
ஆன்லைன் விண்ணபிக்க ஜூன் 17 முதல் தொடங்குகிறது மேலும் ஜூலை 7ஆம் தேதி 11.59 மணிபிற்பகல் வரை விண்ணப்பிக்கலாம் .
ஆன்லைன் விண்ணபிக்க ஜூன் 17 முதல் தொடங்குகிறது மேலும் ஜூலை 7ஆம் தேதி 11.59 மணிபிற்பகல் வரை விண்ணப்பிக்கலாம் .
ஆகஸ்ட் 13 ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது .
விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க தொடங்குங்கள்.
பொறியியல் பாட விரிவுரையாளர் பணிக்கு இளங்கலை பொறியியல்
பாடத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொறியியல் அல்லாத
பாடத்தில் விரிவுரையாளர் பணிக்கு பொறியியல் அல்லாத மற்ற பாடத்தில் முதுகலை முதல்
வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .
விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 600 ஆன்லைனில்
செலுத்த வேண்டும்.
மாற்றுதிறனாளிகள் ரூபாய் 300 மட்டும்
செலுத்தினால் போதுமானது ஆகும்.
ஒய்வு பெறும் வயது 58 ஆகும் .
விண்ணப்பங்களை விண்ணப்பிக்க தமிழக அரசின் ஆசிரியதேர்வு
இணையத்தினை பயன்படுத்துங்கள்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Tuesday, June 20, 2017
என்று கிடைக்கும் திருமண உதவித்தொகை, ஏக்கத்தில் விண்ணப்பதாரர்கள்!!
திருமணமாகி குழந்தைகள் பிறந்த நிலையிலும்
விண்ணப்பித்திருந்த பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை கிடைக்காததால், ஏழை
பெற்றோர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
தமிழகத்தில் ஏழை பெண்களின் நலனை கருத்தில் கொண்டு திருமண
உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் பயனாளிகள்
பத்தாம் வகுப்பு கல்வி தகுதியாக இருந்தால் ரூ 25 ஆயிரம், அரை
பவுன் தாலிக்கு தங்கம் வழங்கப்படுகிறது.
பட்டதாரி பெண்களுக்கு ரூ 50 ஆயிரம்
, அரை பவுன் தாலிக்கு தங்கம் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் பயன்பெற
திருமண நாளுக்கு ஒரு நாள் முன்னதாக பயனாளிகள் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்ய
வேண்டும்.
அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் உட்பட பல்வேறு
மாவட்டங்களிலும் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்த பயனாளிகளுக்கு குழந்தையும்
பிறந்துவிட்டது. இத்திட்டத்தில் வரும் உதவித்தொகையை நம்பி கடன் வாங்கிய பயனாளிகள்
ஒரு ஆண்டிற்கும் மேல் ஆகியும் உதவி தொகை கிடைக்காததால் அவதிக்குள்ளாகி
வருகின்றனர்.
இது குறித்து பயனாளி ஒருவர் கூறுகையில், திருமண
உதவி தொகைக்கு விண்ணப்பித்து 16 மாதங்கள் ஆகிவிட்டது. எனக்கு குழந்தை
பிறந்து ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகி விட்டது. ஆனால் உதவி தொகை குறித்து
அலுவலகத்திற்கு சென்று கேட்டால் அரசிடம் நிதி பற்றாக்குறை உள்ளது என்கின்றனர், என்றார்.
இது குறித்து மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ஒருவர்
கூறுகையில்,
அரசிடம் நிதி பற்றாக்குறை உள்ளதால் மாவட்டத்தில் பல ஆயிரம்
மனுக்கள் ஒரு ஆண்டிற்கும் மேலாக தேங்கி உள்ளன. சுழற்சி முறையில் உதவி தொகை
வழங்கப்பட்டு வருகின்றன. தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு விரைவில் பணம்
கிடைத்துவிடும்,
என்றார்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Sunday, June 18, 2017
டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!!
ராமேசுவரம் அருகே உள்ள செமம்மடம் பகுதியில் ரெயில்வே கேட்
அருகே புதிதாக டாஸ்மாக் கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முயற்சி எடுத்து வருவதாக
கூறப்படுகிறது. செம்மமடம் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து
செம்மமடம்,
மெய்யம்புளி, ஆத்திக்காடு, ஒண்டிவீரன்நகர், சத்யாநகர்
ஆகிய பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தாலுகா
அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
இந்நிலையில் செம்மமடம் பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு
எதிர்ப்பு தெரிவித்து நேற்று மீண்டும் செம்மமடம், சத்யாநகர், ஒண்டிவீரன்நகர்ஆகிய
பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொது மக்களும் மற்றும் அனைத்து கட்சியினரும் இணைந்து
தாலுகா அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். பிறகு அங்கு அவர்கள் கண்டன
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் முடிந்த பின் தாலுகா அலுவலகத்தில் துணை
தாசில்தார் அப்துல்ஜபார் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதில் நகர் போலீஸ்
நிலைய இன்ஸ்பெக்டர் பிரபு,
சப்–இன்ஸ்பெக்டர் லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது கூட்டத்தில் அனைத்து கட்சியினர் செம்மமடம்
மட்டுமல்ல ராமேசுவரம் பகுதியில் எந்த இடத்திலும் டாஸ்மாக் கடைகள் அமைக்கக் கூடாது
என்று முறையிட்டனர். அப்போது துணை தாசில்தார் செம்மமடம் பகுதியில் கண்டிப்பாக
டாஸ்மாக் கடைகள் அமைக்கப்படாது என தெரிவித்தததை தொடர்ந்து அவர்கள் சமரசம் அடைந்து
கலைந்து சென்றனர்.
நன்றி: தினத்தந்தி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Thursday, June 15, 2017
ஜூன் 18ம் தேதி ராமநாதபுரம் மாவட்ட அணி வீரர்கள் தேர்வு!!
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ஜூன் 30 முதல் ஜூலை 2
வரை 16 வயதிற்கு உட்பட்டோருக்கான
மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி திண்டுக்கல்லில் நடக்கிறது.
இதில் பங்கேற்பதற்கான ராமநாதபுரம் மாவட்ட அணி வீரர்கள் தேர்வு மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் ஜூன் 18 காலை 10:00 மணிக்கு ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.
2001 செப்.1
மற்றும் அதற்கு பின் பிறந்தவர்கள் தேர்வில் பங்கேற்கலாம், என
செயலாளர் கே.டி.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
பள்ளி அருகே குவிந்து கிடக்கும் குப்பையால் மாணவர்களுக்கு சுகாதாரக்கேடு!!
ராமநாதபுரத்தில் பள்ளி அருகே குவிந்து கிடக்கும் குப்பையால்
மாணவர்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சியில் தனியார் மெட்ரிக் பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியை ஒட்டி மாரியம்மன்கோயில் தெருவிற்கு செல்லும் பொது பாதை உள்ளது.
இந்த பாதை முழுவதும் குப்பை, இறைச்சி கழிவுகளை கொட்டி சுகாதாரக்கேடு ஏற்படுத்தி உள்ளனர். பள்ளி வகுப்பை ஒட்டிய பகுதியாக இது அமைந்துள்ளதால் மாணவர்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. காற்றில் துர்நாற்றம் வகுப்பறைக்குள் வீசுகிறது.
மேலும், அவ்வப்போது குப்பைக்கு தீ
வைப்பதால் புகையால் மாணவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.
தொடர்ந்து இப்பகுதியில் குப்பை கொட்டப்படுவதால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மாணவர்களின் நலன் கருதி பள்ளி நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும் இப்பகுதியில் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என பெற்றோர் தெரிவித்தனர்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பூட்டி கிடக்கும் கட்டண கழிப்பறை!!
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பூட்டி கிடக்கும் கட்டண
கழிப்பறையால் நோயாளிகளை பார்க்க வருபவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ராமேஸ்வரம், மண்டபம், உச்சிப்புளி
உட்பட சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக
வருகின்றனர். இதுதவிர அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள், அவசர
பிரசவ கேஸ்கள்,
அவர்களுக்கு உதவியாக வரும் பெண்கள், நோயாளிகளை
பார்வையிட வரும் பார்வையாளர்கள் என பலரும் தினமும் வந்து செல்கின்றனர்.
நோயாளிகளை தவிர பார்வையாளர்களும் பயன்பெறும் வகையில்
மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு சுகாதார திட்டத்தின்கீழ் பொதுகட்டண
கழிப்பறை கட்டப்பட்டு இருந்தது. ஆரம்பத்தில் முறையாக பராமரிக்கப்பட்ட கழிப்பறை
வளாகம் பின்னர் பராமரிப்பு பணியில் மந்தம் நிலவியது. தண்ணீர் வசதி முற்றிலும்
இல்லை. இதையடுத்து தற்போது முற்றிலும் அடைக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் நோயாளிகளை பார்வையிட
வரும் பார்வையாளர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
அவசர தேவைக்காக அவர்கள் நோயாளிகளின் கழிப்பறையை பயன்படுத்த முடியவில்லை. இதனால் அவர்கள் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதற்கு மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பார்வையாளர்கள் பலர் வலியுறுத்தி உள்ளனர்.

மருத்துவமனை சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
செய்தி சாராம்சம்: தினகரன்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Monday, June 12, 2017
இந்திய ராணவத்தில் வேலை வாய்ப்பு, ஜூன் 14க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!!
ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்கள் ராணுவத்தில் சேர ஆன்லைனில்
ஜூன் 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இளைஞர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களை சார்ந்தவர்கள்
கல்விப்படை பிரிவு,
டெக்னிகல், டெக்னிகல் பட்டதாரி ஆகிய பதவிகளில்
ராணுவத்தில் சேரலாம்.
இதற்காக www.joinindianarmy.nic.in என்ற
இணையதளத்தில் வயது மற்றும் கல்வித்தகுதி அடிப்படையில் ஜூன் 14க்குள்
விண்ணப்பிக்க வேண்டும்.
கடற்படையில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கு பிளஸ் 2 படித்த
இளைஞர்கள் www.joinindianarmy.nic.in
என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இதுபோல் விண்ணப்பித்தவர்கள் அதுகுறித்த விபரத்தை கலெக்டர்
அலுவலக வளாகத்தில் உள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில்
ஆஜராகி தெரிவிக்கலாம்,
என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Saturday, June 10, 2017
ராமநாதபுரம் மாவட்டத்தில் விடுமுறை நிறைவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்ட்து, மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டன!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கோடை
விடுமுறை நிறைவடைந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து தமிழ்நாடு அரசு மாணவ-மாணவிகளுக்காக செயல்படுத்தி வரும் விலையில்லா
பாடப்புத்தகம்,
விலையில்லா சீருடை வழங்கும் திட்டங்களின்கீழ் ராமநாதபுரம்
நகராட்சி நடுநிலைப்பள்ளி,
அரசு மீள்திறன் பயிற்சி, மாநகராட்சி பெண்கள்
மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சார்ந்த மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா
பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை மாவட்ட கலெக்டர் நடராஜன் வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அப்போது அவர் கூறியதாவது:-
மாவட்டத்தில் 67 அரசு மேல்நிலைப்பள்ளிகளும், 33 அரசு உதவி பெறும் மேல் நிலைப்பள்ளிகளும், 64 அரசு
உயர்நிலைப்பள்ளிகளும்,
21 அரசு உதவி பெறும் உயர் நிலைப்பள்ளிகளும், 154 அரசு நடுநிலைப்பள்ளிகளும், 29 அரசு உதவி பெறும்
நடுநிலைப்பள்ளிகளும்,
758 அரசு தொடக்கப்பள்ளிகளும், 161 அரசு
உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.
நடப்பு கல்வியாண்டில் மாவட்டத்தில் 89,000 மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களும், 37,000 மணவர்களுக்கு விலையில்லா சீருடைகளும் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன், ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) முத்துசாமி, மாவட்ட கல்வி அலுவலர் சந்திரசேகரன், மீள்திறன் பயிற்சி பள்ளி ஒருங்கிணைப்பாளர் நவநீதகிருஷ்ணன், தலைமை ஆசிரியர்கள் விசுவாசம், எஸ்தர் ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நடப்பு கல்வியாண்டில் மாவட்டத்தில் 89,000 மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களும், 37,000 மணவர்களுக்கு விலையில்லா சீருடைகளும் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன், ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) முத்துசாமி, மாவட்ட கல்வி அலுவலர் சந்திரசேகரன், மீள்திறன் பயிற்சி பள்ளி ஒருங்கிணைப்பாளர் நவநீதகிருஷ்ணன், தலைமை ஆசிரியர்கள் விசுவாசம், எஸ்தர் ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Tuesday, June 6, 2017
அரசு தங்கும் விடுதிகளில் சேர ஜூலை 15ம் தேதிக்குள் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்டர்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிற்பட்டோர், மிகவும்
பிற்பட்டோர்,
சீர்மரபினர், சிறுபான்மையினர்
நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தங்கும் விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரிகளைச்
சேர்ந்த மாணவ,
மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் நடராஜன் கூறியுள்ளதாவது:
மாவட்டத்தில் பிற்பட்டோர் மிகவும் பிற்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் பள்ளி செல்லும் குழந்தைகளுக்காக 33 மாணவர் விடுதிகளும், 22 மாணவியர் விடுதிகளும், கல்லூரி செல்லும் இளைஞர்களுக்காக 4 மாணவர் விடுதிகளும், 5 மாணவியர் விடுதிகளும் என மொத்தம் 64 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ, மாணவியரும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர் சேர தகுதியுடையவர்கள் ஆவர். பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர்மரபினர் விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
அனைத்து விடுதி மாணவ, மாணவியருக்கும் உணவு, தங்கும் வசதி அளிக்கப்படும். பத்தாம் வகுப்பு வரைப் பயிலும் மாணவ, மாணவியருக்குச் சீருடைகள் வழங்கப்படும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியருக்குச் சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். விடுதிகளில் சேர்வதற்கு பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ. ஒரு லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீக்கு மேல் இருக்க வேண்டும்.

இந்த தூர விதி மாணவியருக்குப் பொருத்தாது. தகுதியுடைய மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதிக் காப்பாளர், காப்பாளினியிடமிருந்தோ அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளைப் பொருத்தவரை சம்மந்தப்பட்ட விடுதிக் காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வரும் 20ம் தேதிக்குள்ளும் கல்லூரி விடுதிகளைப் பொருத்தவரை சம்மந்தப்பட்ட விடுதிக் காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஜூலை 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கும்பொழுது
விண்ணப்பத்துடன் சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள்
யாதும் அளிக்கத் தேவையில்லை.
தேர்வு செய்யப்பட்டு விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாணவ, மாணவியர் அரசின் இச்சலுகைகளைப் பெற்று பயனடையலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Monday, June 5, 2017
பதிவு சான்றிதழ் பெறாத உணவுபொருட்கள் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவுபொருட்கள்
வியாபாரிகள் உடனடியாக பதிவு மற்றும் உரிம சான்றிதழ் பெறாவிட்டால் சட்டப்பூர்வமாக
கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் நடராஜன் எச்சரித்துள்ளார்.
இந்தியா முழுவதும் அனைவருக்கும் தரமான மற்றும் பாதுகாப்பான
உணவு கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம்
அமலில் உள்ளது. பழைய சட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் வழங்கி வந்த உரிமத்தை
தற்போது புதிய சட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை வழங்குகிறது. ஏற்கனவே
உணவுபொருட்கள் வியாபாரிகளுக்கு பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்காக போதிய கால
அவகாசம் வழங்கப்பட்டுவிட்டதால் வியாபாரிகள் அவர்களுடைய விற்பனை கொள்முதல் தொகைக்கு
ஏற்ப உரிமம் அல்லது பதிவு பெறுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இதன்படி உரிமம் அல்லது பதிவு பெற வேண்டிய உணவு
உற்பத்தியாளர்கள்,
மொத்த விற்பனையாளர்கள் வினியோகஸ்தர்கள், சில்லறை
விற்பனையாளர்கள் மற்றும் உணவுப்பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அனைவரும்
தங்கள் பகுதி உணவு பாதுகாப்பு அலுவலரிடமோ அல்லது மாவட்ட நியமன அலுவலரிடமோ பதிவு
அல்லது உரிமம் சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும்.
வருடத்திற்கு ரூ.12 லட்சத்திற்குள் வியாபாரம்
செய்பவர்கள் உரிய ஆவணங்களுடன் உணவுப் பாதுகாப்பு அலுவலரிடம் நேரிலோ அல்லது தபாலிலோ
சமர்ப்பிக்க வேண்டும். அல்லது அருகில் உள்ள பொது சேவை மையம் மூலம் பதிவேற்றம்
செய்து பதிவுச்சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம். வருடத்திற்கு ரூ.12 லட்சத்திற்கு மேல் வியாபாரம் செய்பவர்களுக்கு உரிமக்கட்டணமாக சில்லறை
விற்பனையாளருக்கு ஆண்டுக்கு ரூ.2,000–மும், தயாரிப்பாளர்கள்
உற்பத்தி நாள் ஒன்றுக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு உட்பட்டதாக இருந்தால் ரூ.3,000–மும், ஒரு மெட்ரிக் டன்னுக்கு மேல் இருந்தால் ரூ.5,000–மும்
கருவூலம் தொடர்புடைய வங்கியில் செலுத்தி தங்களின் விவரங்களை இணையதளத்தில்
பதிவேற்றம் செய்து பதிவேற்றம் செய்த ஆவணங்கள் மற்றும் விண்ணப்பம் அசல் மற்றும்
நகல் இணைத்து மாவட்ட நியமன அலுவலரிடம் நேரிலோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்க
வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்
அலுவலகத்தில் உள்ள மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு அனைத்து உணவு
வியாபாரிகளும் பதிவு சான்று அல்லது உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஏற்கனவே பதிவு மற்றும் உரிமம் உள்ளவர்கள் தங்களது பதிவு
மற்றும் உரிமத்தினை காலாவதியாவதற்கு முன்பே புதுப்பித்துக்கொள்ளவேண்டும். அவ்வாறு
புதுப்பித்துக் கொள்ளும்பட்சத்தில் அவர்கள் தங்கள் உணவுப்பொருளின் பொட்டலத்தில்
அச்சிட்டுள்ள அதே பதிவு மற்றும் உரிமம் எண் பெறுவதோடு அபராதத்தொகையையும்
தவிர்க்கலாம் என்று எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 10,000 உணவு
வணிகர்களுக்கு மேல் உள்ளனர். கடந்த ஆண்டில் உணவுப்பொருட்கள் வியாபாரம்
செய்பவர்களுக்கு 399
உரிமமும், 3,806 பதிவு சான்றிதழும்
ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு துறையினரால் வழங்கப்பட்டுள்ளது.
கடும் நடவடிக்கை
ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரையிலும் கலப்பட
உணவுப்பொருட்கள் அதாவது பாதுகாப்பற்ற, தரக்குறைவான
உணவுப்பொருட்களை விற்பனை செய்த வியாபாரிகள் மீது 45 குற்றவியல்
வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தண்டனையும் அபராதத்தொகையும் விதித்து கடும்
நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது. மேலும், ரூ.4 லட்சத்து
42 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுஉள்ளது. பொதுமக்களும், நுகர்வோர்களும், உணவு
விற்பனையாளர்களும்,
மாணவ–மாணவிகளும் தங்களது உணவுப் பொருட்கள்
தொடர்பான புகார்களை வாட்ஸ்–அப் எண் 94440
42322–ல் தெரிவிக்கலாம்.
அவ்வாறு தெரிவிக்கப்படும் புகார்களுக்கு
உடனடியாக உணவுப்பாதுகாப்பு துறையின் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு குறைகள் சரி
செய்யப்படும். மாவட்டத்தில் உணவுபொருட்கள் வியாபாரிகள் உடனடியாக பதிவு மற்றும்
உரிம சான்றிதழ் பெறாவிட்டால் சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Sunday, June 4, 2017
ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டிற்குள் கடும் நெரிசல், காரணம் விதியை மீறும் டூவீலர்கள்!!
ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டிற்குள் விதியை மீறி டூவீலர்களை
நிறுத்திச் செல்வதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது. ஆனால், போலீசார்
கண்டுகொள்ளாத நிலை உள்ளது. இதனால், மக்கள் கடும்
அவதிக்குள்ளாகின்றனர்.
மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள
ராமநாதபுரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு
புதிய, பழைய பஸ் ஸ்டாண்டுகள் செயல்பட்டு வருகின்றன. தினமும் 300க்கும் மேற்பட்ட அரசு,
தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. நகர பஸ்களில் சுமார் 5 ஆயிரம்
மாணவ, மாணவிகள் தினமும் வந்து செல்கின்றனர். தினந்தோறும் வெளியிடங்களுக்குச்
செல்லும் மக்கள் ராமநாதபுரத்தின் மத்தியப் பகுதியில் இயங்கி வரும் பஸ்
ஸ்டாண்டிற்கு அதிக அளவில் வருவதால் காலை, மாலை நேரங்களில் கூட்டம்
அதிகமாகக் காணப்படும்,
அரசு, தனியார் பஸ்களிலும் பயணிகள் கூட்டம்
எப்போதும் நிரம்பி வழிகிறது.
ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் வெளியேறும் பகுதி, பஸ்களை நிறுத்தும் டிராக் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க டூவீலர்களை நிறுத்தக்கூடாது என போலீசார் அறிவித்தனர். ஆனால், இதைக் கண்டுகொள்ளாமல் பஸ் ஸ்டாண்டிற்கு டூவீலரில் வருவோர் அறிவிப்பு பலகையின் அருகிலேயே தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு தங்கள் சொந்த வேலைகளுக்காக பஸ் ஸ்டாண்டின் உள்ளே செல்கின்றனர்.

இதனால்
தினந்தோறும் அப்பகுதியில் பஸ்களை நிறுத்த முடியாமல் பஸ் டிரைவர்கள் கடும்
அவதியடைந்து வருகின்றனர். ஏற்கெனவே
நெரிசலாக உள்ள பகுதியில் தொடர்ந்து வாகனங்களை நிறுத்துவதால் ஏற்படும் பிரச்னைகளைப்
பொதுமக்கள் உணர்ந்து தங்கள் வாகனங்களை பஸ் ஸ்டாண்டின் வெளியிடங்களில் நிறுத்த வேண்டும். பஸ் ஸ்டாண்டின்
உள்ளே போக்குவரத்தைச் சரி செய்ய போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும்
அவர்களும் இதை கண்டுகொள்ளாமல் இருப்பதால் தங்கள் டூவீலர்களை இஷ்டம் போல்
நிறுத்திவிட்டுச் செல்கின்றனர்.
போக்குவரத்து போலீசாரிடம் கேட்டபோது, “போதிய எண்ணிக்கையில் போலீசார் பணியில் இல்லை. தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். பஸ் ஸ்டாண்டிற்குள் முறையான அறிவிப்பு இருந்தும் பலர் போக்குவரத்துக்கு இடையூறாக தங்கள் டூவீலர்களை நிறுத்திச் செல்கின்றனர். இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. பஸ் ஸ்டாண்டின் உள்ளே டூவீலர்களை நிறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
நன்றி: தினகரன்