Sunday, May 14, 2017
ராமநாதபுரத்தில் கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சி!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாவுக்கு உட்பட்ட 400 வருவாய் கிராமங்களுக்கான
ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.
ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் நடராஜன்
தலைமையில் வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை நடைபெற்றது.
முதல் நாளான நேற்று பெருங்குளம் உள்வட்டத்திற்கு உட்பட்ட
தேர்போகி, குயவன்குடி, வாலாந்தரவை,
கும்பரம், காரான், ரெட்டையூருணி,
பெருங்குளம், அழகன்குளம் ஆகிய வருவாய்
கிராமங்களுக்கான தணிக்கை நடைபெற்றது. இத்தணிக்கை முகாமில் நில அளவை கருவிகள் சரியான
நிலையில் உள்ளதா? என்பது குறித்தும், வருவாய்
கிராம கணக்குகள் குறித்த பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா? என்பது குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
மேலும் இந்த தணிக்கையின் போது மேற்குறிப்பிட்டுள்ள
கிராமங்களை சார்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கை
மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை
மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தணிக்கையின் போதே 3 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 9 நபர்களுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும் வழங்கினார்.
செய்தி: தினத்தந்தி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment