(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, May 25, 2017

ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் உணவுபொருட்கள் கூடுதல் விலைக்கு விற்பனையா!!

No comments :


ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் விலைபட்டியலில் உள்ளதை விட உணவுபொருட்களை கூடுதல் விலைக்கு விற்பதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ராமநாதபுரத்தை சுற்றிலும் அதிக கிராமங்கள் உள்ள நிலையில் சென்னைதிருச்சிமதுரைராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்கு செல்வதற்கு ஏராளமான பயணிகள் தினந்தோறும் ரயில் நிலையம் வருகின்றனர்.
இதனால் கூட்டம் அதிகமான நேரங்களில் ரயில் வரும் வரை பயணிகள் வெயிலில் நிற்க வேண்டியுள்ளது. மழை காலங்களில் வெளியிலும் நிற்க முடியாமல் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் 2, 3வது பிளாட்பாரங்களில் மின்விளக்குகள் எரிவது கிடையாது. இதனால் இரவில் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.



இந்நிலையில் தற்போது ராமநாதபுரம் ரயில்வே கேண்டீனில் உணவுபொருட்களும் நிர்ணயித்த விலையைவிட கூடுதலாக விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். விலைபட்டியலில் ரூ.5 க்கு டீ கிடைக்கும் என எழுதிவைத்து விட்டு பயணிகளிடம் ரூ.7 கேட்கின்றனர். ரூ.12க்கு 2 இட்லி என இருந்தும் ரூ.15 கேட்கின்றனர். இதுகுறித்து விளக்கம் கேட்டால் விருப்பம் இருந்தால் வாங்குங்கள், இல்லையென்றால் வேண்டாம் என்று கடைஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

ரயிலில் செல்லும் பயணிகளும் மானாமதுரையை அடுத்து எந்த ரயில் நிலையத்திலும் உணவு பொருட்கள் இல்லாததால் வேறுவழியில்லாமல் கூடுதல் விலைகொடுத்து வாங்கி செல்கின்றனர். ரயில்வே உயர் அதிகாரிகள் ரயில்நிலையத்தில் நடைபெறும் இதுபோன்ற செயல்களை அவ்வப்போது ஆய்வு செய்தால்தான் இப்பிரச்னைக்கு ஒரு முடிவு கிடைக்கும் என பயணிகள் தெரிவித்தனர்.

ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...............


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment