Sunday, April 16, 2017
ரவுடி என்கவுண்டர் - நீதி விசாரனை கோரி மனு!!
தொண்டி அருகே கடந்த 13–ந்தேதி
இரவு உசிலங்கோட்டை டி.புதுக்குடி காலனியை சேர்ந்த கோவிந்தன் என்பவர் போலீசார்
நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் நேற்று கோவிந்தனின் மனைவி பவானி (வயது 40),
தனது மகள்கள் பாண்டியம்மாள்(19), பவித்ரா(17),
தனலட்சுமி(15) மற்றும் உறவினர்களுடன் கலெக்டர்
அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் நடராஜனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது:–
எனது கணவர் கோவிந்தன் விவசாய வேலை செய்து வந்தார். கடந்த 13–ந்தி மாலை எனது கணவரை விசாரணைக்காக ஒரு சிலர் அழைத்து சென்றனர். அன்று
இரவு 10 மணி வரை என்னுடன் செல்போனில் அடிக்கடி தொடர்பு
கொண்டு பேசினார். அதன் பின்பு அவரிடம் பேசமுடியவில்லை. நள்ளிரவில் அவரை கொடிபங்கு
அருகே போலீசார் சுட்டுக்கொன்றதாக தகவல் வந்தது.
அவரை சுட்டுக்கொன்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி ஏற்கனவே பரமக்குடி துப்பாக்கி சூட்டில்
தொடர்புடையவர். நீதிபதி சம்பத் கமிஷனால் விசாரிக்கப்பட்டவர். எனவே அவர் மீது
வழக்கு பதிவு செய்ய வேண்டும். எனது கணவர் இறப்புக்கு உடனடியாக நிவாரண தொகை வழங்க
வேண்டும்.
மேலும் என்னுடைய மூத்த மகளுக்கு உடனே அரசு வேலை வழங்க
வேண்டும். உரிய நீதி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.செய்தி: தினத்தந்தி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
1 comment :
ரவுடி என்கவுண்டர்னு செய்தி தலைப்பு. ஆனால் விசாரனை வேண்டும் என கோரிக்கை என்றால் முரணாக இருக்கிறதே?
Post a Comment