Monday, April 3, 2017
ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார
நிலையங்களில் குழந்தைகளுக்கு போலியோ
சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.
பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள்
வரை இளம்பிள்ளைவாத நோய் ஏற்படுகிறது. இந்நோயை முற்றிலிலுமாக ஒழிக்க மத்திய, மாநில
அரசுகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. தமிழகத்தில் ஆண்டிற்கு 2 முறை
இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.
இந்நிலையில் நேற்று
ராமநாதபுரம் அருகே போகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்
கலெக்டர் நடராஜன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து முகாமை துவக்கி
வைத்தார்.
நேற்று நடந்தது போல், வரும் 30ம் தேதியும் போலியோ மருந்து வழங்கப்படும். சொட்டு மருந்து வழங்கும் முகாமிற்கு ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி சுகாதாரப் பகுதிகளில் ஆயிரத்து 217 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு (கிராமப் பகுதிகளில் 1122 மற்றும் நகரப்பகுதியில் 95) 4 ஆயிரத்து 897 பணியாளர்களை கொண்டு 1.20லட்சம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.

துவக்க விழாவில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்)
மீனாட்சி, வட்டார மருத்துவ அலுவலர் முகமது சுல்த்தான் உள்ளிட்ட பல மருத்துவர்கள்
பங்கேற்றனர்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment