Sunday, April 2, 2017
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 88 மதுக்கடைகள் மூடப்பட்டன!!
தேசிய–மாநில நெடுஞ்சாலைகளில் இயங்கிவரும்
மதுக்கடைகளை உடனடியாக மூடவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
உத்தரவிட்டுள்ளது.
இதன்படி தமிழகம் முழுவதும் நேற்று முதல் அனைத்து தேசிய,மாநில
நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த மதுக்கடைகள் உடனடியாக மூடப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 139 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன. கடந்த சில தினங்களுக்கு முன் அரசு 500 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 கடைகள் மூடப்பட்டன.
இதன்பின்னர் 129 டாஸ்மாக் மதுக்கடைகள்
மட்டுமே செயல்பட்டு வந்தன. தற்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி மாவட்டத்தில்
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த மதுக்கடைகள்
கணக்கெடுக்கப்பட்டதில் 88
மதுக்கடைகள் அடையாளம் காணப்பட்டு உடனடியாக நேற்று காலை
முதல் மதுக்கடைகள் அடைக்கப்பட்டன. மீதம் உள்ள 41 கடைகள் மட்டுமே ராமநாதபுரம்
மாவட்டத்தில் செயல்பட்டு வந்தன.
குறிப்பாக ராமநாதபுரத்தில் 13 கடைகள்
செயல்பட்டு வந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து நெடுஞ்சாலைகளில்
இயங்கி வந்த 10
கடைகள் மூடப்பட்டன.
நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த மதுக்கடைகள்
அடைக்கப்பட்டதால் திறந்திருந்த கடைகளை நோக்கி கூட்டம் வரத்தொடங்கியது. இதனால்
அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த கடைகளையும்
மூட வேண்டும் என்று தெரிவித்தனர்.
குறிப்பாக ராமநாதபுரம் காட்டூருணி பகுதியில்
செயல்பட்டு வந்த மதுக்கடையின் அருகில் கோவில்கள் அமைந்துள்ளது. இதன்காரணமாக
இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு ஏற்பட்டு வரும் தொந்தரவு காரணமாகவும்
காட்டூருணி பகுதி கடையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து
வந்தனர். தற்போது திறந்திருக்கும் இந்த மதுக்கடையை நாடி நூற்றுக்கணக்கானோர்
வந்ததால் காட்டூருணி பகுதி பொதுமக்கள் இந்த மதுக்கடையை அகற்ற கோரி போராட்டம் நடத்த
போவதாக அறிவித்துள்ளனர்.
மாவட்டம் முழுவதும் அடைக்கப்பட்டுள்ள மதுக்கடைகளுக்கு
மாற்றாக பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய இடங்களில் மதுக்கடைகளை
அமைக்க டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் ஆயத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment