(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, April 15, 2017

துபாயில் திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 65 வது பிறந்தநாள் விழா!!

No comments :
துபாயில் திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 65 வது பிறந்தநாளை முன்னிட்டு துபாய் திமுக சார்பாக லத்திபா மருத்துவமனையில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாட்டில் இருந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திமுக மாநில இளைஞரணி செயலாளர் மற்றும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. அன்பின் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்தார்.



இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் அதிகமானோர் இரத்ததானம் செய்தனர்.
இதில் துபாயை சேர்ந்த இசா அல் கூரைர் சிறப்பு அழைப்பாளராகா கலந்து கொண்டு இரத்ததானம் செய்தார்.

இதில் அமீரகத்தின் திமுக நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கலந்துகொண்டனர்.

இதை தொடர்ந்து மாலை 7 மணியளவில் தேராவில் உள்ள கிரேண்ட் எக்ஸல்சியர் ஹோட்டலில் நடந்த  மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழாவில் திரு. அன்பின் மகேஷ் பொய்யாமொழி சிறப்புரை ஆற்றினார்.

செய்தி: அஸ்கர் அலி
திமுக.




(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment