Thursday, March 30, 2017
ஏர்வாடியில் மின் கட்டண வசூல் மையம் கேட்டு மனு!!
ஏர்வாடியில் மின் கட்டண வசூல் மையம் கேட்டு தலைமை
பொறியாளரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
ஏர்வாடி மற்றும் ஏர்வாடி தர்ஹா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் 7ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளது. இவர்கள் அனைவரும் மின் கட்டணம்
செலுத்துவதற்கு ஏர்வாடியிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில்
உள்ள உத்திரகோசமங்கைக்கு செல்ல வேண்டியுள்ளது. மேலும் உத்திரகோசமங்கைக்கு
ஏர்வாடியிலிருந்து சரியான பஸ் வசதி இல்லை. ஆகவே 100 ரூபாய்
மின் கட்டணம் செலுத்துவதற்கு ரூ.300 ஆட்டோவுக்கு செலவு செய்ய
வேண்டியுள்ளது.
ஆகவே கீழக்கரையில் உள்ளது போல் ஏர்வாடியில் அமைக்கப்பட்டு வரும் உப மின் நிலையத்திலேயே. மின் கட்டணம் வசூல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி மதுரை தலைமை பொறியாளர் நல்லம்மாளிடம்
ஏர்வாடி மக்கள் நல சங்கம் மற்றும் கிராம பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
செய்தி: தினகரன்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment