(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Friday, March 3, 2017

ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டு பகுதியில் சாலையோர கடைகளால் போக்குவரத்து சிரமம்!!

No comments :
ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டு பகுதியில் 20க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் உள்ளன. பழங்கள், துணிகள், வீட்டு பொருட்கள், மளிகை கடை, பேன்சி ஸ்டோர், ஹோட்டல் என கடைகளை வியாபாரிகள் வைத்துள்ளனர். ஏற்கனவே அப்பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக சாலை அகலமாக இருந்தது. 

கடந்த சில மாதங்களாக வியாபாரிகள் தங்கள் கடையை ஒவ்வொரு அடியாக உயர்த்தி வருவதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சாலை குறுகலாக மாறி வருகிறது.

பலர் தங்களது கடைகளை தாண்டி முகப்பு செட்டுகள் அமைத்தும் அதற்கு மேலாக மேல்பகுதியில் பிளாஸ்டிக்காலான மறைப்புகளை பயன்படுவதால் பஸ்கள் வந்து செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. பஸ் ஸ்டாண்டிற்கு அருகிலேயே உழவர் சந்தை 25க்கும் மேற்பட்ட கடைகளுடன் உள்ளது. சாலைகளை ஆக்கிரமிக்கும் பழக்கடைகளை மட்டுமாவது அப்பகுதிக்கு மாற்றினால் பஸ் ஸ்டாண்டு அருகே ஓரளவிற்கு போக்குவரத்து நெரிசல் குறையும்.

நகராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

சாலையை ஆக்கிரமிக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


செய்தி: தாஹிர், இராமநாதபுரம்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment