(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, March 15, 2017

வானொலி தொகுப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :
வானொலி தொகுப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
அகில இந்திய வானொலியின் எஃப்.எம். ரெயின்போ பண்பலை ஒலிபரப்பில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பாக அகில இந்திய வானொலி நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நல்ல பேச்சாற்றல், கவிதை, கதை, கட்டுரைகள் படிப்பதில், எழுதுவதில் ஆர்வமுள்ள இளைஞர்களிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



விண்ணப்பக் கட்டணமாக ரூ. 300 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்புவோர் படிவங்களை
அகில இந்திய வானொலி நிலையம்,
இந்திரா நகர், கோரிமேடு,
புதுச்சேரி - 6

என்ற முகவரியில் அலுவலக நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.

தகுந்த சான்றுகளுடன் நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் மார்ச் 31-ஆம் தேதிக்குள் வானொலி நிலையத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment