(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, March 2, 2017

ராமநாதபுரம் மாவட்டத்தில் 15, 394 மாணவ,மாணவியர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் 45 தேர்வு மையங்களில் வியாழக்கிழமை முதல் 15, 394 மாணவ,மாணவியர்கள் பிளஸ் 2  அரசுப் பொதுத்தேர்வு எழுத இருப்பதாக ஆட்சியர் எஸ்.நடராஜன் புதன்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியது: தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு வியாழக்கிழமை தொடங்கி மார்ச் 31 நடைபெறுகிறது. ராமநாதபுரம் வருவாய் மாவட்டத்தில், பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 3,170 ஆண்கள், 4,236 பெண்கள் உட்பட 6,463 பேரும், ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 4,236 ஆண்கள், 5,235 பெண்கள் உட்பட 9,471 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.

வருவாய் மாவட்ட அளவில் 45 தேர்வு மையங்களில் 7356 ஆண்கள்,8578 பெண்கள் உட்பட மொத்தம் 15, 934 பேர் பிளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வினை எழுதவுள்ளனர்.

இவர்களில் 13 மாற்றுத்திறனாளிகளும் தேர்வு எழுத ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 20 மாணவர்களுக்கு ஒரு அறை கண்காணிப்பாளரும்,10 தேர்வு அறைகளுக்கு ஒரு நிற்கும் படையும் கண்காணிப்பில் ஈடுபடுவர்.


தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வுகளில் முறைகேடுகள் நடக்காமல் இருக்கவும், தேர்வு மையங்களை ஆய்வு செய்யவும் வருவாய் மாவட்ட அளவில் தேர்வு நடைபெறும் 45 தேர்வு மையங்களையும் 6 மண்டலங்களாகப் பிரித்து 6 ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment