Wednesday, February 22, 2017
கோயிலை சுற்றியுள்ள மதுபான கடைகளால் பக்தர்களுக்கு சிரமம்!!
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலை சுற்றியுள்ள மதுபான
கடைகளால் பக்தர்கள்,
சுற்றுலா பயணிகள் பரிதவிக்கின்றனர்.
ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா
பயணிகள் வந்துசெல்கின்றனர். இந்நிலையில் கோயிலை சுற்றி நகரின் முக்கிய பகுதிகளான
பஸ் ஸ்டாண்ட்,
தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை, ரயில் நிலையம்
உள்ளிட்ட பகுதிகளில் 11
டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கிவருகிறது.
பார் வசதி உள்ளதால் இந்த கடைகளில் பின்வாசல் வழியான மதுபான
வியாபாரம் 24
மணி நேரமும் தங்குதடையின்றி நடக்கிறது.
பார் மற்றும் பொதுஇடங்களில் அமர்ந்து மது அருந்தும்
குடிமகன்கள் போதை தலைக்கேறிய நிலையில் அவ்வப்போது ரகளையில் ஈடுபடுவது, அருவருக்கத்தக்க
வார்த்தைகளால் பேசுவது அன்றாட நிகழ்வாகி வருகிறது.
போதை ஆசாமிகள் சிலர் பெண் பயணிகள், பக்தர்களை
குறிவைத்து தள்ளாடியவாறு அவர்கள் மீது இடிக்கின்ற சம்பவங்களும் நடக்கிறது. இவை
கோயிலுக்கு வரும் பக்தர்களையும், சுற்றுலா பயணிகளையும் பரிதவிக்க
வைக்கிறது. மேலும் புனித நகர் என்ற பெருமைக்கு பங்கம் விளைவிப்பதாகவும் உள்ளது.
விதிமுறைகளை மீறி கோயிலை சுற்றி திறக்கப்பட்டுள்ள மதுபான கடைகளை அகற்ற மாவட்ட
நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சுற்றுலா ஆர்வலர்கள்
வலியுறுத்தி வருகின்றனர்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment